21 Apr 2021

ஆய கலையின் அறுபத்து ஐந்தாவது கலை

ஆய கலையின் அறுபத்து ஐந்தாவது கலை

நேக்காக நடந்து கொண்டு காரியம் செய்து கொள்ள வேண்டும்

அந்த எல்லையில் நின்று கொண்டு

அப்படியே போய் கொண்டு இருக்க வேண்டும்

தேவையில்லாமல் மீறி முற்படக் கூடாது

ஆபத்துகள்தான் விளையும்

நைசாகக் காரியம் சாதிக்க வேண்டும்

அந்த காரியத்தையே மீண்டும்

கனவிலும் நினைத்துப் பார்க்கக் கூடாது

எந்தத் தீமையிலும் எந்த கஷ்டத்திலும் ஒரு நன்மை உண்டு

கவனிக்கத் தவறி விடக் கூடாது

அதற்காக தீமைகளையும் கஷ்டங்களையும்

தேடி வைத்துக் கொள்ளக் கூடாது

எல்லாரிடமும் எல்லா காரியங்களையும்

சாதித்து விட முடியாது

சாதிக்க முயன்றவர்களிடம் சாதித்துக் கொண்டு 

சாதிக்க இயலாதவர்களிடம் ஜகா வாங்கிக் கொள்ள வேண்டும்

எல்லாவற்றிலும் நைசானத் தன்மையே நல்லது

எதில் வருகிறதோ அதை மட்டும் செய்து கொண்டு

அத்தோடு நின்று கொள்ள வேண்டும்

அதுதான் நமக்கு நல்லது கெளரவம் நிம்மதி

எல்லாவற்றிலும் வழுக்கினாற்போல்தான் போக வேண்டும்

முடிந்த முடிவாகப் பேசுவது பேசுபவருக்கே ஆபத்து

தப்பித்துக் கொள்வது எல்லாரும் நினைப்பது போல

அவ்வளவு எளிய கலை அன்று

*****

No comments:

Post a Comment

திருக்குறள் என்பது கோடானு கோடி பாட்டா?

திருக்குறள் என்பது கோடானு கோடி பாட்டா? விடிவதற்குள் ஒரு இரவில் நான்கு கோடி பாடல்களைப் பாடும் வல்லமை உள்ளவர்கள் நாட்டில் உள்ளார்களா எனச் சவ...