20 Apr 2021

மீண்டும் புத்தர் பிறக்கிறார்

மீண்டும் புத்தர் பிறக்கிறார்

வருவதற்கும், போவதற்கும் என்ன காரணமிருக்கிறது

அதுவாக வருகிறது அதுவாகப் போகிறது

அதற்கு எதுவும் செய்வதற்கில்லை

இதனால்தான் வருகிறது

இவரால்தான் வருகிறது என்று நினைக்கலாம்

அது தடைபடுவதற்கு ஆயிரம் காரணங்கள் இருக்கின்றன

அப்படி இருந்தும் அது வருகிறது என்றால்

அதற்கு யார் காரணமாக இருக்க முடியும்

கணிப்புகளைத் தாண்டியும் தவறுகள் நடக்கின்றன

கணிப்புகளை நிறுத்திக் கொள்ள வேண்டும்

அடம் பிடிப்பதால் எந்தப் பயனும் விளையப் போவதில்லை

கவனிக்க வேண்டிய வாய்ப்புகளை

திரை போட்டு மறைப்பதில் என்ன இருக்கிறது

யாருக்கும் உதவ முடியும்

உதவுவதற்கு ஒருவர் அனுமதிக்க வேண்டும்

அதை யாரும் செய்ய மாட்டார்கள்

இதனால் உதவுவதற்கு இரட்டிப்பு மடங்கில்

அவஸ்தைப் பட வேண்டி இருக்கும்

உதவியைப் புரிந்து கொள்பவர்கள்

உலகில் செத்துப் போய் நாளாகிறது

*****

No comments:

Post a Comment

திருக்குறள் என்பது கோடானு கோடி பாட்டா?

திருக்குறள் என்பது கோடானு கோடி பாட்டா? விடிவதற்குள் ஒரு இரவில் நான்கு கோடி பாடல்களைப் பாடும் வல்லமை உள்ளவர்கள் நாட்டில் உள்ளார்களா எனச் சவ...