19 Apr 2021

ஒரு நூறு சுடுகாடுகள்


 ஒரு நூறு சுடுகாடுகள்

வரியாக செலுத்தியது போக

லஞ்சமாக கொடுத்தது போக

அபராதமாக அழுதது போக

வட்டிக்குக் கட்டி வதியழிந்தது போக

பெட்ரோல் டீசல் போட்டது போக

துரு பிடித்து உதிர்ந்து போன தகரத்தைப் போல

நிற்குமிந்த வாழ்வில்

கழுத்துக்கு கயிறு

விஷத்துக்கு வயிறு

குதிப்பதற்கு மாடி

படுப்பதற்கு தண்டவாள வசதிகள் நிரம்பவே இருக்கின்றன

செத்தபின் செலவில்லாமல் போக

அமரர் ஊர்திகள் அங்கங்கே அலைந்து கொண்டிருக்கின்றன

சவம் இல்லாத ஊருக்கு நூறு சுடுகாடுகள்

*****

No comments:

Post a Comment

திருக்குறள் என்பது கோடானு கோடி பாட்டா?

திருக்குறள் என்பது கோடானு கோடி பாட்டா? விடிவதற்குள் ஒரு இரவில் நான்கு கோடி பாடல்களைப் பாடும் வல்லமை உள்ளவர்கள் நாட்டில் உள்ளார்களா எனச் சவ...