18 Apr 2021

அதற்குப் பின் தண்டிக்கப்படுவீராக

அதற்குப் பின் தண்டிக்கப்படுவீராக

குழந்தையை அடிக்கும் தாய் ஒருத்தி

வலிக்க வலிக்க சுமந்து பெற்றவள்

அந்த அடிகள் உம் இதயத்தில் விழாது இருப்பதற்காக

தடுக்க முற்படுவீரோ

மனசுக்கு வேடிக்கையாக இருக்கிறது என்பதற்காக

ரசிக்க ஆட்படுவீரோ

அடிபட்ட பின் குழந்தை

அதை மறந்து சிரிக்கும் போழுதில்

நிச்சயம் நீர் தண்டிக்கப்படுவீர்

அந்த அடிகளை உம் முதுகில் வாங்காததற்காக

அத்தாயின் இயலாமையைப் பகிர்ந்து கொள்ளாததற்காக

*****

No comments:

Post a Comment

சங்கடத்தின் பின்னுள்ள காரணங்கள்

சங்கடத்தின் பின்னுள்ள காரணங்கள் எவ்வளவோ விளக்கங்கள் எத்தனையோ தத்துவங்கள் எண்ணிச் சொல்ல முடியாது அவ்வளவு ஆறுதல்கள் அத்தனை அழுகைகள் ...