17 Apr 2021

தற்கொலை எனப் பேசாதிருப்பதாக

தற்கொலை எனப் பேசாதிருப்பதாக

இது அவர்களுக்காக மேற்கொள்ளப்பட்ட மரணம்

அவர்கள் இதை உணர்ந்து கொள்ள வேண்டும்

என்பதற்காக நிகழ்த்தப்பட்ட மரணம்

நிச்சயமாக தமக்காக அன்றி

முழுக்க முழுக்க அவர்களுக்காக

அந்த ஒரு நொடியில் அவசரம் அவசரமாக

செய்து கொள்ளப்பட்ட மரணம்

துளியும் அவருக்காக இல்லாத மரணம்

இறந்தது மட்டும்தான் அவர்

ஆனால் அது அவர்களுக்காக புனையப்பட்ட மரணம்

அவர்கள் அதை அறிந்து கொண்டார்களா என்பது

அவரின் ஆத்மா அறியாது இருக்கட்டும்

ஆகையால் அதை தற்கொலை எனப் பேசாதிருப்பீர்களாக

மற்றும் பேசாதிருப்பார்களாக

*****

No comments:

Post a Comment

பழக்கங்களும் தாவரங்களும் – வள்ளுவரின் பார்வை!

பழக்கங்களும் தாவரங்களும் – வள்ளுவரின் பார்வை! மனிதர்களும் விலங்குகளும் குறிப்பிட்ட காலம் வரை வளர்கின்றனர். தாவரங்கள் அப்படியல்ல. ஆயுள் ம...