16 Apr 2021

சவப்பெட்டிக்குள் புன்னகை

சவப்பெட்டிக்குள் புன்னகை

சவப்பெட்டிக்குள் இருக்கும் புன்னகை

எல்லா முகங்களுக்கும் வாய்ப்பதில்லை

வாழ்நாள் முழுவதும் சிரித்திருந்தால்

சவப்பெட்டியிலும் புன்னகை நிறைந்திருக்கும்

உடையாத கனவுகள்

உறுத்தாத நினைவுகள்

இதயம் இயங்கியிருப்பது தெரிந்திருக்கக் கூடாது

இதயம் நின்றது தெரியாமல் இருப்பவர்களுக்கே

அது வாய்க்கிறது

காற்றோடு காற்றாய்ப் பறந்து போகும் மலர்கள்

சூறாவளியில் கசங்கிப் போகுமா என்ன

சவப்பெட்டியில் புன்னகை இல்லாதவர்க்கு

மாலை போட வேண்டும்

எரிப்பதற்கு எதுவும் இல்லாத இடத்தில்

நெருப்பு எதை எரிக்கப் போகிறது

சவப்பெட்டியில் புன்னகையோடு உறங்குவது பெரிய கலை

*****

No comments:

Post a Comment

கடனின்றிக் கல்வி கற்பது சாத்தியந்தானா?

கடனின்றிக் கல்வி கற்பது சாத்தியந்தானா? கல்விக்கடன் சரியா? “கற்கை நன்றே கற்கை நன்றே பிச்சை புகினும் கற்கை நன்றே” என்றார் அதிவீரராம பா...