15 Apr 2021

எச்சரிக்கை ஒரு குழந்தை படிக்கிறது

எச்சரிக்கை ஒரு குழந்தை படிக்கிறது

ஆயா ஒரு கையால் ஒரு குழந்தையின் மலம் துடைக்கிறாள்

மறுகையால் ஒரு குழந்தையின் பசி தீர்க்கிறாள்

அதிகாலையில் எழுந்த களைப்பால்

உறங்கிக் கிடக்கும் பிள்ளைகளுக்கு

அவ்வபோது மிஸ் பாடம் கதைத்துக் கொண்டே

ரிங்கிட்டுக் கொண்டிருக்கும் செல்பேசியை

தலையில் தட்டுகிறாள்

டிக்டேஷனில் விசாரணைக் கைதிகள் போல்

குழந்தைகள் அடிபடுகின்றன

வீட்டுவேலை நினைப்பு வந்ததும்

மிஸ்கள் ஒவ்வொருவராக ஹோம் ஒர்க்கை

அள்ளி வீசுகிறார்கள்

வேனை விட்டு இறங்கியதும்

குழந்தைகைளத் தூக்கி எறிந்து விட்டு

ஹோம் ஒர்க்கை அள்ளி ஏந்திக் கொள்ளும் பெற்றோர்கள்

பெருமிதமாக உணர்கிறார்கள் என்பது புளங்காகிதம்

பிஞ்சுகள் கருகிய வாசனை கேட்கிறதா உங்களுக்கு

மூக்கை அறுத்துக் கொள்ள தயங்காதீர்கள்

யாருக்கும் காது கேட்காத சமூகத்தில்

உங்கள் அலறல் சத்தம் பாதுகாப்பாக இருக்கும்

*****

No comments:

Post a Comment

பழக்கங்களும் தாவரங்களும் – வள்ளுவரின் பார்வை!

பழக்கங்களும் தாவரங்களும் – வள்ளுவரின் பார்வை! மனிதர்களும் விலங்குகளும் குறிப்பிட்ட காலம் வரை வளர்கின்றனர். தாவரங்கள் அப்படியல்ல. ஆயுள் ம...