14 Apr 2021

தவற விடப்பட்ட அற்புதம்

தவற விடப்பட்ட அற்புதம்

நான் அந்த அற்புதத்தைத் தவற விட்டேன்

அதை என்னால் மீட்க முடியவில்லை

ஒரு மரணத்தைப் போல் நிகழ்ந்து விட்டது

செத்தது செத்ததுதான்

மீண்டும் உயிர்பிக்க முடியாததால்

அது அற்புதமாக மாறி விட்டது

ஒருவேளை உயிர்ப்பிக்க முடிந்திருந்தால் சலித்திருக்கும்

அநேகமாக கண்டுகொள்ளப்படாமலும் போயிருக்கும்

நானே கூட கொலையும் செய்திருக்கலாம்

அற்புதம் தப்பித்தது அதன் அதிர்ஷ்டம்

*****

No comments:

Post a Comment

கடனின்றிக் கல்வி கற்பது சாத்தியந்தானா?

கடனின்றிக் கல்வி கற்பது சாத்தியந்தானா? கல்விக்கடன் சரியா? “கற்கை நன்றே கற்கை நன்றே பிச்சை புகினும் கற்கை நன்றே” என்றார் அதிவீரராம பா...