13 Apr 2021

விதிகளின் சிரிப்பு

விதிகளின் சிரிப்பு

விதிகளோடு வாழ யாருக்குப் பிடிக்கும்

தலைவிதியென வாழ்வதில்

யாருக்கு என்ன மறுபரிசீலனை இருக்கும்

அச்சத்தை உருவாக்கும் விதிகளுக்கு

இந்த விதி பொருந்தாது

உயிரச்சத்தை உருவாக்கும் விதிகளுக்கு

இந்த விதி அறவே பொருந்தாது

விதிகளை உருவாக்கும் போது

ஓர் அச்சம் விதைக்கப்படுகிறது

அவ்விதி எதிர்க்கப்படும் எனும் விதி இருந்தால்

உயிரச்சம் மறுபடியும் விதைக்கப்படுகிறது

விதைக்கப்பட்ட விதிகள் தூவப்படுகின்றன

அவைகள் முளைத்தெழுகின்றன

தலைவிதியென வாழ்கிறார்கள் மனிதர்கள்

ஆதியில் அப்படி விதி இருந்ததாக பேசித் திரிகிறார்கள்

விதிகள் சிரித்துக் கொள்கின்றன ரகசியமாய்

*****

No comments:

Post a Comment

பழக்கங்களும் தாவரங்களும் – வள்ளுவரின் பார்வை!

பழக்கங்களும் தாவரங்களும் – வள்ளுவரின் பார்வை! மனிதர்களும் விலங்குகளும் குறிப்பிட்ட காலம் வரை வளர்கின்றனர். தாவரங்கள் அப்படியல்ல. ஆயுள் ம...