12 Apr 2021

மழையை உருவாக்கும் வேலை

மழையை உருவாக்கும் வேலை

பொதுவாகப் பொழிந்த மழை

கடலில் கொஞ்சம் நிலத்தில் கொஞ்சம்

மலையில் கொஞ்சம் பொழிந்தது

மலையில் பொழிந்த மழையை

மனிதர்கள் எடுத்துக் கொண்டார்கள்

அணைக்கட்டில் அடைத்துக் கொண்டு

அதற்காக அவர்களை அவர்களே அடித்துக் கொண்டார்கள்

நிலத்தில் பொழிந்த மழையை

வெள்ளம் வந்ததென விரட்டி விட்டார்கள்

கடலில் பொழிந்த மழைக்கு இதெல்லாம் தெரியாது

மறுமுறை நிலத்திலோ மலையிலோ பொழியும் போது

காண்பதெல்லாம் கடலாக இருக்கும்

என்று நினைத்துக் கொள்ளும்

கடலை உருவாக்குவது மழைக்குப் பெரிய வேலை இல்லை

மழையை உருவாக்குவது மனிதர்க்குப் பெரிய வேலை

*****

No comments:

Post a Comment

பழக்கங்களும் தாவரங்களும் – வள்ளுவரின் பார்வை!

பழக்கங்களும் தாவரங்களும் – வள்ளுவரின் பார்வை! மனிதர்களும் விலங்குகளும் குறிப்பிட்ட காலம் வரை வளர்கின்றனர். தாவரங்கள் அப்படியல்ல. ஆயுள் ம...