அச்சமூட்டுவதற்காக மன்னியுங்கள்
என்
கவிதைகள் அச்சமூட்டுவதற்காக
என்னை
மன்னியுங்கள்
இறுதியில்
நிகழப் போவதை
முதலில்
காட்டுவது ஒரு நல்ல கவிதையா என கூறுங்கள்
சொற்களின்
ஊடே அர்த்தத்தைத் தேடி
களைத்துப்
போனவர்களிடம் ஒன்று கேட்கிறேன்
சொற்களின்
ஊடே கிளைத்த
உங்கள்
உணர்வைக் கிள்ளிப் போட்டது எது
நீங்கள்
சிக்கலானவர்கள் என்பதை மறுக்கிறேன்
பணத்துக்காக
பகட்டுக்காக
பல
தலைமுறை சுயநலத்துக்காக
குழம்பி
நிற்பதை அறிவென்பதை எதிர்க்கிறேன்
நீங்கள்
ஒரு மனநோயாளி அல்ல என்பதை
எப்படி
மறுக்க முடியும்
ஒரு
கருத்துக்காக ஆயுதம் ஏந்தி வரும் உங்களை
ரட்சகர்கள்
என்றால் சிரிக்காமல் எப்படி இருக்க முடியும்
என்ன
நான் தவறாகச் சொல்லி விட்டேன்
எனது
பயம் எனக்கானதன்று
உங்களுக்கானது
உங்கள் தலைமுறைக்கானது
*****
No comments:
Post a Comment