6 Nov 2020

எங்கேயும் கிறுக்காத கவிதைகள்

எங்கேயும் கிறுக்காத கவிதைகள்

அப்போது நான் நான்கு கவிதைகளை நினைத்திருந்தேன்

எழுதுவதற்கு காகிதமில்லை

குறித்து வைக்க அலைபேசி இல்லை

எப்படியோ இரண்டு கவிதைகள்

காற்றில் மாயமானது

மீதி இரண்டு கவிதைகளை

நீண்ட நேரம் உரு போட்டுக் கொண்டிருந்தேன்

மீண்டும் மீண்டும் சொல்வது

மறந்து போகும் என்பதை நம்புவீர்களா

அப்படித்தான் ஆனது மீதி கவிதைகளும்

நான்கு கவிதைகளின் போஸ்ட் மார்ட ரிப்போர்ட்டை

எழுத வேண்டும் மரண அவஸ்தை

கவிதையைக் கிடைத்த இடத்தில் கிறுக்கித் தொலைத்திருக்கலாம்

*****

No comments:

Post a Comment