23 Nov 2020

தண்ணீர் புராணம்


 தண்ணீர் புராணம்

வறண்ட தொண்டைக்குள் சென்ற நீர்

விக்கல் தீர்க்கவில்லை

கர்நாடகக்காரன் தந்த

காவிரி நீராகத்தான் இருக்கும் என்கிறாள் பெரியாச்சி

நான் தந்த மழைக்கு யார் உரிமை கொள்வது என்று

சண்டை பிடிக்கிறாள் மாரியம்மா

பொன்னியம்மன் கோயிலில் கஞ்சி வாங்கிக் குடித்தவர்கள்

பெட்டிக் கடையில் மினரல் வாட்டர்

வாங்கிக் குடிக்கிறார்கள் ஏதேதோ பேர் சொல்லியபடி

நாலு மைல் தூரம் நடந்து சென்று

தண்ணீர் தூக்கி வரும் கருத்தம்மாவுக்கு

இதெல்லாம் தெரியாது

கையில் காசிருந்தால் வாட்டர் கேன் போடுபவன்

வீட்டு வாசலில் இறக்கி விட்டுப் போவான்

யார் தந்த தண்ணீரையோ

*****

No comments:

Post a Comment

பழக்கங்களும் தாவரங்களும் – வள்ளுவரின் பார்வை!

பழக்கங்களும் தாவரங்களும் – வள்ளுவரின் பார்வை! மனிதர்களும் விலங்குகளும் குறிப்பிட்ட காலம் வரை வளர்கின்றனர். தாவரங்கள் அப்படியல்ல. ஆயுள் ம...