2 Nov 2020

விளையாட்டுக் குஷியில் நடந்தது


 ஆச்சரியம்

ங்கு இங்கு என்று நடப்பவர்

எதுக்கென்று தெரியாமல்

சிரித்த போது

காணாமல் போகப் போவது தெளிவானது

காணாமல் போக விட்டு

கவலைப்பட்டவர்கள்

காணாமல் போனவர் திரும்பி வந்த போது

தெளிவாக இருப்பதைப் பார்த்து

ஆச்சரியப்படாதீர்கள்

*****

விளையாட்டுக் குஷியில் நடந்தது

மண்டையைத் திற

மழை பெய்யும்

இரத்தத்தில் என்ன நெய்யா வடியும்

போடா வெண்ணெய்

விளையாட்டு துப்பாக்கிதான்

சுட்டு விட்டது

ஆள் காலி

எப்படி நடந்திருக்கும்

சீரியஸாக விசாரித்துக் கொண்டிருக்கிறார்கள்

சிறுவர்கள் வழக்கம் போல்

விளையாடிக் கொண்டிருக்கிறார்கள் குஷியாக

*****

No comments:

Post a Comment

திருக்குறள் என்பது கோடானு கோடி பாட்டா?

திருக்குறள் என்பது கோடானு கோடி பாட்டா? விடிவதற்குள் ஒரு இரவில் நான்கு கோடி பாடல்களைப் பாடும் வல்லமை உள்ளவர்கள் நாட்டில் உள்ளார்களா எனச் சவ...