3 Nov 2020

வேற்றுகிரகவாசிகள்

வேற்றுகிரகவாசிகள்

தந்திரம் மிக்கதான நரி

ஒரு கிரகத்திலிருந்து வந்தது

காட்டு ராசா சிங்கம்

இன்னொரு கிரகத்திலிருந்து வந்தது

நச்சுப் பாம்பு

மற்றொரு கிரகத்திலிருந்து வந்தது

மருளும் மான்

ஏதோ ஒரு கிரகத்திலிருந்து வந்தது

புலி, ஒட்டகம், பன்றி ஒவ்வொன்றும்

ஒவ்வொரு கிரகத்திலிருந்து வந்தது

மனிதர்கள் மட்டும்

ஒரே கிரகத்திலிருந்து வந்தது என்பதை

எப்படி நம்புவது

ஒவ்வொன்றும் ஒவ்வொரு கிரகம்

*****

No comments:

Post a Comment

திருக்குறள் என்பது கோடானு கோடி பாட்டா?

திருக்குறள் என்பது கோடானு கோடி பாட்டா? விடிவதற்குள் ஒரு இரவில் நான்கு கோடி பாடல்களைப் பாடும் வல்லமை உள்ளவர்கள் நாட்டில் உள்ளார்களா எனச் சவ...