5 Nov 2020

உலகம் உன்னால் காப்பாற்றப்படுவதாக


 டாஸ்மாக்கில் கூட்டம் மொய்த்துக் கொண்டிருக்கிறது

இளநீர் வியாபாரி டீ குடிக்கிறான்

டீ வியாபாரி டீயையே குடிக்கிறான்

நாடு ரொம்ப கெட்டுப் போய் விட்டது

காரில் வந்திறங்கியவன்

நொங்கை நோண்டித் தின்கிறான்

நுங்கு வியாபாரி

பட்ட சரக்கை ஊற்றிக் கொண்டிருக்கிறான்

குளிர்பானக் கடையில் ஈ மொய்த்துக் கொண்டிருக்கிறது

பக்கத்தில் டாஸ்மாக்கில் கூட்டம் மொய்த்துக் கொண்டிருக்கிறது

*****

உலகம் உன்னால் காப்பாற்றப்படுவதாக

ரத்தத்தைப் பற்றி நிறைய எழுதி விட்டாய்

ஒரு கோப்பை ரத்தம் குடி

வன்முறையைப் பற்றி பேசினால்

எலும்பை உடைத்து விடுவேன்

ஆட்டுகால் சூப்பைக் குடித்து விட்டு

அப்படியே ஓடி விடு

அமைதியாக இருப்பதாக நடிக்காதே

பல் உடைப்பு நிகழும்

மெளனமாக இல்லாமல்

ஏதேதோ எழுதி பேசி நடித்து

எல்லாவற்றையும் குலைத்து விட்டாய் நாசகாரா

வரலாறு பற்றி பேச அருகதை இல்லை

ஒரு ஜோக் புத்தகம் படி

அது போதும் உனக்கு

உலகம் உன்னால் காப்பற்றப்படுவதாக

*****

No comments:

Post a Comment

பழக்கங்களும் தாவரங்களும் – வள்ளுவரின் பார்வை!

பழக்கங்களும் தாவரங்களும் – வள்ளுவரின் பார்வை! மனிதர்களும் விலங்குகளும் குறிப்பிட்ட காலம் வரை வளர்கின்றனர். தாவரங்கள் அப்படியல்ல. ஆயுள் ம...