அணையுடைக்கும் கண்ணீர்
நிரம்பிய
அணையிலிருந்து வழியும் நீரை
மானசீக
கருணையோடு பகிர்கிறார்கள்
வழிந்தோடும்
உபரி நீர்
விசால
மனதின் கரைகளை உடைக்கிறது
அவர்கள்
கேட்டதை விடவும்
அதிகம்
கொடுத்து விட்டார்கள்
கடலின்
பங்கை மிகையாகச் செலுத்தியது போக
கைகளில்
இருப்பது சில சொட்டுகள்
வறண்ட
நிலத்தின் அகோரப் பசி கொண்ட நாக்குக்கு
சில
பருக்கைகள் கடைசிச் சொட்டுப் பிச்சைகள்
வெடித்த
நிலத்தின் தேள்கள் நட்டுவாக்காலிகள்
விசம்
உதறி ஊர்ந்து போகின்றன
மூக்குடைந்து
பல் உடைபட்டு விழுவது போல
மதகணைகள்
உடைகின்றன
தேக்க
முடியாத இயலாமையைச் சுமக்க முடியாமல்
இமை
கிழிந்து வழிகிறது பிரயோசனம் இல்லாத கண்ணீர்
வறண்ட
வயிறு பற்றி வளர்ந்த முதலைகளுக்கு என்ன கவலை
*****
No comments:
Post a Comment