24 Nov 2020

மிகவும் நேசிக்கப்பட வேண்டிய நூற்றாண்டு

மிகவும் நேசிக்கப்பட வேண்டிய நூற்றாண்டு

இந்த நூற்றாண்டை மிகவும் நேசிக்கிறேன்

காடுகளைத் தின்று விட்டார்கள்

மலைகளை நொறுக்குத் தீனியாக்கி விட்டார்கள்

கடலை குடித்து விட்டார்கள்

பிரியாணிக்காக பிள்ளைகளைக் கொல்லும்

பெண் பிறந்திருக்கிறாள்

குழந்தைகளை மோகித்துக் கொல்லும்

ஆண் பிறந்திருக்கிறான்

காசுக்கு உறுப்புகளை விற்க முடிகிறது

மலட்டு விதையில் முளை தெரிகிறது

சுற்றுவதைப் பொழுதுபோக்கெனச் செய்கிறது பூமி

நாம்தான் நிறைய கவலைப்படுகிறோம்

இந்த நூற்றாண்டை ரசிக்கத் தெரியாமல்

ஆகவே

இந்த நூற்றாண்டை மிகவும் நேசிப்பதாகுக

*****

No comments:

Post a Comment

திருக்குறள் என்பது கோடானு கோடி பாட்டா?

திருக்குறள் என்பது கோடானு கோடி பாட்டா? விடிவதற்குள் ஒரு இரவில் நான்கு கோடி பாடல்களைப் பாடும் வல்லமை உள்ளவர்கள் நாட்டில் உள்ளார்களா எனச் சவ...