7 Nov 2020

வரிகளின் வரிகள்

வரிகளின் வரிகள்

தலைவர்கள் திட்டங்களைத் தீட்டுகிறார்கள்

சாமன்யர்கள் வரிகளைக் கட்டுகிறார்கள்

தலைவர்கள் சட்டங்களை விதிக்கிறார்கள்

சாமன்யர்கள் வரிகளைக் கட்டுகிறார்கள்

தலைவர்கள் அதிகாரம் செய்கிறார்கள்

சாமான்யர்கள் வரிகளைக் கட்டுகிறார்கள்

தலைவர்கள் வரலாற்றை எழுதுகிறார்கள்

சாமன்யர்கள் வரிகளைக் கட்டுகிறார்கள்

தலைவர்கள் வெற்றி பெறுகிறார்கள்

சாமான்யர்கள் வரிகளைக் கட்டுகிறார்கள்

சாமான்யர்கள் வரிகளைக் கட்டாவிட்டால்

எந்த தலைவர் வரிகளைத் தீட்டுவார்

எந்தத் தலைவருக்காக யார் வரலாற்றை எழுதுவார்

சாமன்யர்கள் வரிகளைக் கட்டுகிறார்கள்

தலைவர்கள் அதற்கான வரிகளைத் தீட்டுகிறார்கள்

*****

No comments:

Post a Comment

அனுபவங்களின் பின் நிற்கும் முடிவுகள்

அனுபவங்களின் பின் நிற்கும் முடிவுகள் ஏதோ ஒன்றைத் தேட தேடுவது கிடைக்கவில்லை என்பதைத் தவிர வேறொன்றும் பிரச்சனையில்லை இவ்வளவுதான் இப்பட...