10 Oct 2020

போர்முறையை உருவாக்கியவர்கள்

இயற்கை இல்லாத இடத்தில்...

இயற்கை இல்லாத இடத்தில்

இயற்கையாக எதுவும் நிகழாது என்றாலும்

மாநகரத்தில் மழை பெய்யும்

வெயில் அடிக்கும்

*****

நிம்மதியாக உறங்க நன்றி சொல்ல வேண்டும்

நாட்கள் நிறைய ஆயிற்று

மரணத்தை அவர் ஏற்றுக் கொள்வதற்கு

இந்த அளவில் மரணம்

எடுத்துக் கொண்டதற்காக

நன்றி சொல்ல வேண்டும் என்றேன்

அன்றிரவு அவர் நிம்மதியாக உறங்கினார்

*****

போர்முறையை உருவாக்கியவர்கள்

வர்கள் இருவரும்

வார்த்தைகளிலிருந்து தற்காத்துக் கொள்வதாக

நினைத்துக் கொண்டார்கள்

வெகு லாவகமாக உரையாடினார்கள்

மிக நாகரிகமாக சொற்களைப் பொறுக்கி எடுத்தார்கள்

கண்ணியமாக ஒருவரையொருவர் விளித்தார்கள்

சண்டை வராது என்றுதான் நினைத்திருந்தோம்

முடிவில் இருவரும் அடித்துக் கொண்டார்கள்

அவர்களின் தற்காப்பு முறை

ஒரு போர்முறையை உருவாக்கிப் போய் விட்டதாக

புலம்பத் துவங்கினோம்

குருதி வழியத் தொடங்கியது

***** 

No comments:

Post a Comment

அனுபவங்களின் பின் நிற்கும் முடிவுகள்

அனுபவங்களின் பின் நிற்கும் முடிவுகள் ஏதோ ஒன்றைத் தேட தேடுவது கிடைக்கவில்லை என்பதைத் தவிர வேறொன்றும் பிரச்சனையில்லை இவ்வளவுதான் இப்பட...