20 Oct 2020

வழக்குகளை அவசரப்படுத்த முடியாது

வழக்குகளை அவசரப்படுத்த முடியாது

எப்போது தங்கையின் திருமணம்

அவள் திருமணம் முடிந்து விட்டது

முடிந்ததன் அடையாளமாகத் தூக்கு மாட்டிக் கொண்டாள்

அறைக் கதவை உடைத்துக் காப்பாற்றியவன்

வாகன விபத்தில் மண்டை பிளந்து காலியானான்

பிழைத்துக் கொண்டதற்கு அடையாளமாக

ஜீவனாம்ச வழக்குக்காக அலைந்து கொண்டிருக்கிறாள் தங்கை

ஐம்பது பவுனும் பத்து லட்சம் சீர்வரிசைகளை

வரதட்சணையாக லபக்கியவன்

மாதம் 5000 ஜீவனாம்சம் கொடுப்பதற்கு யோசித்து

மேல் முறையீட்டில் நிற்கிறான்

இப்போதும் தங்கைக்கு எப்போது கல்யாணம் என்கிறார்கள்

கல்யாண பார்ட்டிக்கு அவ்வளவு என்ன அவசரம்

வழக்குகள் தொடர்ந்து கொண்டிருக்கின்றன

வழக்குகளை அவசரப்படுத்த முடியாது

*****

No comments:

Post a Comment

பழக்கங்களும் தாவரங்களும் – வள்ளுவரின் பார்வை!

பழக்கங்களும் தாவரங்களும் – வள்ளுவரின் பார்வை! மனிதர்களும் விலங்குகளும் குறிப்பிட்ட காலம் வரை வளர்கின்றனர். தாவரங்கள் அப்படியல்ல. ஆயுள் ம...