23 Oct 2020

பிழையாப் பிழைப்பு

பிழையாப் பிழைப்பு

பசியாயிருக்கிறது

எண் ஏதேனும் இருக்கிறதா

எண் ஏதேனும் இருந்தால் பசியிருக்காதா

வரிசையில் வா

வேறு வழியில்லையா

ஆள் செத்து நாளாகி விட்டது

காத்திரு

அவசியமில்லை

பேரிடர்கள் வந்து சென்று விட்டன

*****

அது அங்கேதான் இருக்கிறது

கானகத்தில் மரமொன்றைத் தேடுவது

கடலில் கரைந்த உப்புத் துகளொன்றைக் காண்பது

காதல் பெரிதாகி விட்டது

அன்பு அங்கேதான் இருக்கிறது

கானகத்தில் மரமொன்றைத் தேடுவதைப் போல

கடலில் கரைந்த உப்புத் துகளொன்றைக் காண்பதைப் போல

*****

No comments:

Post a Comment

பழக்கங்களும் தாவரங்களும் – வள்ளுவரின் பார்வை!

பழக்கங்களும் தாவரங்களும் – வள்ளுவரின் பார்வை! மனிதர்களும் விலங்குகளும் குறிப்பிட்ட காலம் வரை வளர்கின்றனர். தாவரங்கள் அப்படியல்ல. ஆயுள் ம...