11 Oct 2020

கணத்தின் துணிச்சல்


 கணத்தின் துணிச்சல்

எதை நேருக்கு நேர்

எதிர்கொள்ள முடியவில்லையோ

அதில் வெற்றி பெற முடிவது எப்படி

எதையும் நேருக்கு நேர்

எதிர்கொண்டு அறியாதவர்கள்

நியாயமானப் போராட்டத்தை

சமூக விரோதம் என்பார்கள்

தீர்ப்பைப் பெற்ற பிறகும்

பேச்சு வார்த்தை நடத்த வேண்டும் என்பார்கள்

தம் நாடகத்தை வேற்று நிலத்தில் நிகழ்த்துவதற்காக

‍சொந்த நிலத்தில் நாடகமாடுவார்கள்

மகுடங்களை யாரும் யாருக்கும்

சூட்டி விட முடியாது

சூடிக் கொள்பவர்கள் எடுத்து

சூட்டிக் கொள்வார்கள்

அந்தக் கணத்தின் துணிச்சலை

யார் யாருக்கும் கற்றுத் தர முடிகிறது

*****

 

தணிதல்

இரு சக்கர வாகனத்தின்

இருபுறமும் இளநீர்க் குலைகளாக

தான் கொணர்ந்த

ப்ளாஸ்டிக் பாட்டிலில்

தாகம் தணித்துக் கொள்கிறார்

வியாபாரி

*****

No comments:

Post a Comment

மூன்று லட்சியங்கள்! (சிறுகதை) - விகடபாரதி

மூன்று லட்சியங்கள்! (சிறுகதை) -          விகடபாரதி போக்குவரத்தில் நீந்தி வருவது சாகசம். சில நேரங்களில் எதிர்நீச்சல் போடுவது போல இருக்கிற...