12 Oct 2020

காதலிப்பதை நிறுத்துவது வசதியாக இருக்கிறது

காதலிப்பதை நிறுத்துவது வசதியாக இருக்கிறது

ஆண்கள் ஜீன்ஸ் பேண்டைப் போன்றவர்கள்

அடித்துத் துவைத்துக் காயப் போடலாம்

பெண்கள் பட்டுச் சேலையைப் போன்றவர்கள்

துவைப்பதில் நாசுக்கு வேண்டும்

ஆண்கள் ஜீன்ஸைத் துவைப்பதில்லை

பெண்கள் பட்டுச் சேலையை

அடிக்கடி சலவைக்குப் போடுகிறார்கள்

துவக்கத்தில் பெண்களுக்கு

ஆண்களின் ஜீன்ஸ் மேல் காதல் இருந்தது

நாற்றமடிக்கத் துவங்கிய போது அருவருக்கத் தொடங்கினார்கள்

ஆண்களுக்கு பெண்களின் பட்டுச் சேலை மேல்

இனம் புரியாத கவர்ச்சி இருந்தது

அடிக்கடி சலவைக்குப் போகும்

அதன் அதி தூய்மையை வெறுக்கத் தொடங்கினார்கள்

பிரச்சனைக்குத் தீர்வாக

ஆண்கள் வாரத்துக்கு ஒரு முறை ஜீன்ஸைத் துவைக்கலாம்

பெண்கள் வாரத்துக்கு ஒரு முறை பட்டுச் சேலை அணியலாம்

துரதிர்ஷ்டவசமாக ஆண்களுக்கும் பெண்களுக்கும்

அது பிடிக்காமல் போகவே

கல்யாணத்திற்குப் பிறகு தாங்கள்

காதலிப்பதை நிறுத்தி விட்டதாக கூறிச் சென்றார்கள்

*****

No comments:

Post a Comment

மூன்று லட்சியங்கள்! (சிறுகதை) - விகடபாரதி

மூன்று லட்சியங்கள்! (சிறுகதை) -          விகடபாரதி போக்குவரத்தில் நீந்தி வருவது சாகசம். சில நேரங்களில் எதிர்நீச்சல் போடுவது போல இருக்கிற...