15 Oct 2020

இடம் பொருள் ஏவல் மழை


 இடம் பொருள் ஏவல் மழை

பிடித்தாலும் பிடிக்காவிட்டாலும்

எல்லார் மேலும் பெய்யும் மழை

பிடிக்காவிட்டால் குடை பிடித்துக் கொள்

குடையை மறந்து விட்டால் ஒதுங்கும் இடம் நினைவு கொள்

பிடித்தால் மழையில் நனைந்து போ

ஜலதோஷம் பிடிக்கும் என்றால் மழை ஆடையோடு நனையாமல் போ

ரொம்ப கோபிக்காதே

சாக்கடையில் விழும் மழைத்துளி உன் மேல் விழுந்தால் என்ன

இன்னும் கொஞ்ச நேரத்தில்

வெள்ளமாய் வந்து அடித்துச் செல்லும் பார்

ஏரிக் கரையை உடைத்து விடுவதற்கு முன்

மழையில் நனைந்திருக்கலாம் வீடு போயாவது சேர்ந்திருப்பாய்

இப்போது பார் போகும் இடம் வேறாகி விட்டது

*****

No comments:

Post a Comment

மூன்று லட்சியங்கள்! (சிறுகதை) - விகடபாரதி

மூன்று லட்சியங்கள்! (சிறுகதை) -          விகடபாரதி போக்குவரத்தில் நீந்தி வருவது சாகசம். சில நேரங்களில் எதிர்நீச்சல் போடுவது போல இருக்கிற...