தப்புத் தாளங்கள்
பயந்து கொண்டுதான் தவறுகள்
நிகழ்கின்றன
துணிந்தால் தவறலாமா என்று
கேட்காதே
துணிந்த பின் தவறு செய்யத்
தோன்றாது
மனபயத்துக்காக
எவ்வளவு துணிந்து செல்வார்கள்
என்பதைக்
கணிக்க முடியாது
அவர்களின் பயத்துக்குக் காரணம்
இருந்தது
செயல்களுக்குக் காரணம் இல்லை
பயத்தில் நம்பிக்கை விதைக்கப்பட்டிருக்க
வேண்டும்
மென்மேலும் பயம் விதைக்கப்பட்ட
போது
பயந்து பயந்து பயத்தில் மேலும்
துணிந்து சென்றார்கள்
அந்தத துணிச்சல் ஆபத்தானது
என்று
பயம் காட்டியவர்களுக்குத்
தெரியவில்லை
பயமுறுத்துவது வசதியாய் இருக்கிறது
அவர்களுக்கான ஆபத்தும் அடங்கியிருக்கிறது
*****
No comments:
Post a Comment