27 Oct 2020

ஒன்றும் செய்யாமல் இருப்பது

ஒன்றும் செய்யாமல் இருப்பது

நீங்கள் அப்படித்தான் இருக்கிறீர்கள் என்றால்

கோபத்தை எப்படி உள்வாங்குவீர்கள்

நீங்கள் அப்படித்தான் இருக்கிறீர்கள் என்றால்

கவலையை எப்படி உள்வாங்குவீர்கள்

நீங்கள் அப்படித்தான் இருக்கிறீர்கள் என்றால்

விரக்தியை எப்படி உள்வாங்குவீர்கள்

நீங்கள் அப்படி இல்லை

அப்படி இருப்பதை விடவும்

கோபப்பட விரும்புகிறீர்கள்

கவலைப்பட விரும்புகிறீர்கள்

விரக்தி கொள்ள விரும்புகிறீர்கள்

உங்கள் விருப்பம் இல்லாமல்

இன்னொன்றாக ஆக முடியாது

அப்படி இருப்பதினும் இன்னொன்றாக இருப்பதில்

அனுகூலம் இருப்பதாகக் கருதுகிறீர்கள்

அனுகூலும் இல்லை என்று தெரியும் போது

கோபப்பட்டிருக்கக் கூடாது என்கிறீர்கள்

கவலைபட்டிருக்கக் கூடாது என்கிறீர்கள்

விரக்தி கொண்டிருக்கக் கூடாது என்கிறீர்கள்

ஒன்று புரிந்து கொள்ளுங்கள்

இதைப் பொருத்த வரையில்

நீங்கள் செய்ய வேண்டியதெல்லாம்

ஒன்றும் செய்யாமல் இருப்பதுதான்

ஏன் நீங்கள் உங்கள் கோபத்தை கவலையை விரக்தியை

ஏற்றுக் கொள்ளக் கூடாது

ஏற்றுக் கொள்வதன் மூலம்

ஒன்றுமில்லாமல் போகக் கூடியவைகள் அவைகள்

வெப்பத்தை இழுக்கும் பனிக்கட்டி கரையத்தான் செய்கிறது

*****

No comments:

Post a Comment

திருக்குறள் என்பது கோடானு கோடி பாட்டா?

திருக்குறள் என்பது கோடானு கோடி பாட்டா? விடிவதற்குள் ஒரு இரவில் நான்கு கோடி பாடல்களைப் பாடும் வல்லமை உள்ளவர்கள் நாட்டில் உள்ளார்களா எனச் சவ...