22 Oct 2020

ஜனநாயகம் தெரிந்தவர்கள்

ஜனநாயகம் தெரிந்தவர்கள்

ஜனநாயகத்தைப் பற்றி

பெரிசுகள் பேசிக் கொள்கிறார்கள்

அன்றொரு காலத்தில்

ரவா உப்புமாவுக்காக

ஒட்டுப் போட்டார்களாம்

வேட்டிச் சோலைக்காக

ஓட்டுப் போட்டார்களாம்

பட்டா வாங்கித் தரும் வாக்குறுதிக்காக

ஓட்டுப் போட்டார்களாம்

மூக்குத்தி

காமாட்சி விளக்கு

குக்கர் என்று முன்னேறி

தற்போதொரு காலத்தில்

இருபது ரூபாய் நோட்டை

இரண்டாயிரம் நோட்டாய் ரசவாதம்

செய்தவற்காகவும் ஓட்டுப் போட்டிருக்கிறார்களாம்

*****

No comments:

Post a Comment