13 Oct 2020

கோடாலித் தைலம் கொண்டு வா

கோடாலித் தைலம் கொண்டு வா

பட்டணம் விட்டு ஊருக்குத் திரும்புவது நல்ல விசயம்

நிறைய பாலங்கள் இருக்கின்றன

ஆற்றில் தண்ணீர்தான் ம்ஹூம்

காம்பளக்ஸ்கள் விரவிக் கிடக்கின்றன

வயல்கள் எங்கே போய்த் தொலைந்தனவோ

டாஸ்மாக் பாரில் குடித்துக் கொண்டிருக்கிறார்கள்

பெண்டு பிள்ளைகள் தண்ணீருக்காக

தவளையைத் தலையில் சுமந்தபடி அலைந்து கொண்டிருக்கிறார்கள்

அங்கங்கே ப்ளாட்டுக்கான கற்கள் அடிக்கப்பட்டிருக்கின்றன

சிறுவர் கிரிக்கெட் விளையாடிக் கொண்டிருக்கிறார்கள்

செவத்தக்காவின் எட்டு எருமைகள் செத்து விட்டன போலும்

பன்றிக்குட்டிகள் குறுக்கும் மறுக்குமாக ஓடுகின்றன

வழக்கமாக வீட்டுக்கு வந்ததும் லோட்டாவில்

தண்ணீரை நீட்டும் அம்மா

இன்னும் கேன் வாட்டர் வரவில்லை என்கிறாள்

மினரல் வாட்டர் விளம்பரம் டி.வி.யில் ஓடிக் கொண்டிருக்கிறது

வழக்கமாக இப்படி இளைச்சுட்டியே என்பவள்

சீரியல்லாம் பார்க்குறீயாடா என்கிறாள்

அம்மாவிடம் கோடாலித் தைலம் இருந்தால் கொண்டு வா என்கிறேன்

*****

No comments:

Post a Comment

இருக்கும் போதும்… இல்லாத போதும்…

இருக்கும் போதும்… இல்லாத போதும்… சம்பாதிக்கும் காலத்தில் ஆயிரம் ரெண்டாயிரம் என்று கடன் கொடுக்க ஆயிரம் பேர் ஐயா கடன் வேண்டுமா என்று அ...