14 Oct 2020

லாப கஷ்டம்

லாப கஷ்டம்

சிலை திருட்டில் நல்ல லாபம் இருக்கிறது

மாட்டிக் கொண்டால் கஷ்டம்

அதற்கென்ன செய்வது

சாமி சிலையைத் திருடுவதற்கு முன்

சாமியிடம் நன்றாக வேண்டிக் கொண்டு போ

*****

பழிப்பு விதைகள்

சந்தையில் நல்ல கத்திரிகளுள்

முற்றிய கத்திரி வாங்கும் பாக்கியம்

யாருக்கு வாய்க்கும்

வீட்டில் திட்டுவார்கள்

விசனப்படாமல் விதைக்கு வைத்துக் கொள்

*****

இழப்பு

ஒரு ஜீப்பை எரிச்சதுக்குக் கோபப்பட்டு

துப்பாக்கியால சுட்டா

இருப்பதையெல்லாம் இழந்துட்டு நிற்கிறாங்களே

அவங்க கோபப்பட்டு

எத்தனைப் பேரைச் சுடணும்

இழப்பதற்கு எதுவுமில்லை என்று

எவர் சொன்னது

உயிர் இருக்கிறது

*****

No comments:

Post a Comment

இருக்கும் போதும்… இல்லாத போதும்…

இருக்கும் போதும்… இல்லாத போதும்… சம்பாதிக்கும் காலத்தில் ஆயிரம் ரெண்டாயிரம் என்று கடன் கொடுக்க ஆயிரம் பேர் ஐயா கடன் வேண்டுமா என்று அ...