26 Oct 2020

அப்பட்டமான பாசாங்கு

அப்பட்டமான பாசாங்கு

நீங்கள் வருத்தப்படுவது உண்மையானது

அதை மறைத்துக் கொள்வதல்ல

கோபப்படுவது உண்மையானது

அதை இல்லையென்று சொல்வதல்ல

வெறி கொண்டு அலைவதும் உண்மையானது

அதை அமைதியாக்குவது என்ற பெயரில் அம்முவதல்ல

ஏமாற்றத்தை உணர்வது உண்மையானது

அதை நிறைவாக உணர்வதல்ல

நீங்கள் அதற்காகத்தானே

செல்போனை உடைக்கிறீர்கள்

தொலைக்காட்சிப் பெட்டியும்

கணிப்பொறியும் அதனால்தானே கண்டமாகின்றன

சில நேரங்களில் கொலையும் செய்கிறீர்கள்

உங்களின் கோபம் விரக்தி ஏமாற்றம் போல

எதிராளியினுடையதையும் ஏற்றுக் கொள்ளுங்கள்

ஆசிர்வதிப்பதாகச் சொல்வதெல்லாம்

அப்பட்டமானப் பாசாங்கு

*****

No comments:

Post a Comment

திருக்குறள் என்பது கோடானு கோடி பாட்டா?

திருக்குறள் என்பது கோடானு கோடி பாட்டா? விடிவதற்குள் ஒரு இரவில் நான்கு கோடி பாடல்களைப் பாடும் வல்லமை உள்ளவர்கள் நாட்டில் உள்ளார்களா எனச் சவ...