மூன்றாவது பஞ்சாயத்து
செய்யு - 606
கிராம முக்கியஸ்தருங்க பேச்ச நம்பிப் போனதுதாம்
சுப்பு வாத்தியாரு பண்ண பெரிய தப்பு. ராசாமணி தாத்தா பஞ்சாயத்துக்குப் பெருமாள்சாமி,
சித்துவீரன், முருகு மாமா, லாலு மாமா, ஆனந்தனெ அழைச்சிட்டு வந்துச்சு. "கிராமத்துப்
பஞ்சாயத்துலத்தாம் இன்னும் நீதிக் கெடைக்குதுன்னு நம்பி வந்தா நமக்கும் இஞ்ஞயும் நல்லது
நடக்காது போலருக்கு. நல்லதோ, கெட்டதோ நறுக்குத் தெறிச்சாப்புல ஒரு முடிவெ சொல்லாம
நாட்டுல இருக்குற கோர்ட்டப் போல வழவழன்னு போயிட்டு இருந்தா ன்னா அர்த்தம்?"ன்னுச்சு
ராசாமணி தாத்தா.
"யாரும் ஒண்ணுத்தையும் எடுத்த எடுப்புலயே
பேசிட வாணாம்! இன்னிக்கு ரண்டுல ஒண்ணுத்தெ முடிச்சிப்புடணும்ன்னுத்தாம் பஞ்சாயத்துக்
கூடியிருக்கு. கொஞ்சம் அவசரப்படாதீயே!"ன்னாரு சொட்டெ கண்ணுராசு. அதெ தொடந்து
என்ன நடக்குதுன்னுப் புரிஞ்சிக்க முடியாத அளவுக்கு ராசாமணி தாத்தா தரப்புலேந்து வந்தவங்க
படபடன்னு மாத்தி மாத்திப் பேச ஆரம்பிச்சிட்டாங்க.
"எஞ்ஞ வூட்டுப் பொண்ண கொண்டாந்து
வெச்சுக்கிட்டு அனுப்ப முடியாதுன்னு சொல்றதுக்கு எவனுக்குடா தெகிரியம் இருக்கு? அனுப்பி
வெச்சிப்புட்டு மறுவேல பாருங்கடா வெங்கம் பயலுகளா!"ன்னு சித்துவீரன் பேச ஆரம்பிச்சது.
"பஞ்சாயத்துன்னு வந்தப் பெறவு பொண்ண
கொண்டாந்து வுட்டுப்புட்டு மருவாதியாப் போவானா? அதெ வுட்டுப்புட்டு ன்னா மசுத்துக்கு
மான மருவாதிக் கெட்டு வூட்டுல வெச்சிக்கிட்டு அசிங்கப்படுறாம்! இவ்வனெல்லாம் ஒரு வாத்திப்
பயெ!"ன்னுச்சு முருகு மாமா.
"யிப்போ ஒடனே பொண்ண கொண்டாந்து
வுட்டுப்புட்டு மறுவேல பாருடா! ல்லன்னா கூட்டிக் கொடுத்துப் பொழைடா கம்முனாட்டிக்
கூதி!"ன்னாரு பெருமாள்சாமி. யாரும் எதிர்பாக்குறதுக்குள்ள இப்பிடியா வார்த்தைக
அடுத்தடுத்து வந்து விழுந்துச்சு.
"யப்பா பேசுறதெ மருவாதியாப் பேசுங்க.
இத்து ன்னா சந்தெக் கடையா? சாக்கடையா? வாயிக்கு வந்தாப்புல பேசுறதுன்னா பஞ்சாயத்து
என்னதுக்கு?"ன்னாரு பரமுவோட அப்பா ஒடனே எடையில பூந்து ஆவேசமா.
"எலே யாரு ஊர்ல பஞ்சாயத்து நடக்குதுன்னு
இஷ்ட மயித்துக்குப் பேசுறானுவோ? அவ்ளோ தெகிரியம் எப்பிடி நம்ம ஊர்ல நம்ம எடத்துல
இருந்துக்கிட்டு இன்னோரு ஊருக்கார பயலுவோளுக்கு வருது?"ன்னாரு சின்னுவோட அப்பாவும்
கோவமா.
"பொண்ணத்தாம் கட்டிக் கொடுத்துட்டாம்லா
வாத்தி! பெறவென்னா வூட்டுலக் கொண்டுப் போயி வெச்சிக்கிடுறது? அதுக்கு எதுக்கு பொண்ணக்
கட்டிக் கொடுத்தாம் பைத்தியங்கூலி புண்டெ மவ்வேம்? ன்னய்யா ஊரு ஊருன்னா? ஊர்ல ஞாயத்தப்
பேசணுமா இல்லியா? அதெ வுட்டுப்புட்டு ரண்டு பஞ்சாயத்தா ன்னத்த சொரிஞ்சி வுட்டுக்கிட்டு
இருக்குதீயளா? நாமளும் பாக்குறேம்! ஒழுங்கா அனுப்பு முடியுமா என்னான்னு வாத்திப் பயலெ
கேளுங்க! இல்லாட்டி வூடு பூந்து பொண்ணக் கொண்டாந்து உரிமெகாரவுங்களோட அனுப்பி வுடுங்க!"ன்னாம்
பட்டறைக்கார்ரேம் பட்டாமணி காட்டுக் கத்தலா.
"யேய் ன்னப்பா இத்து? ஊர்க்காரனெப்
போல பேசுப்பா! நம்ம ஊருக்கார ஆளெ ஒருத்தெம் கண்டபடிக்குப் பேசுனா நீயும் சேந்துக்கிட்டுப்
பேசுனா ன்னா அர்த்தம்? இத்துச் சரியில்ல!"ன்னாரு பரமுவோட அப்பா காட்டமா. சொட்டெ
கண்ணுராசு எல்லாத்தையும் பாத்துக்கிட்டும், கேட்டுக்கிட்டு இருந்தாரே தவுர என்னத்தெ
பேசுறதுன்னு தெரியாததப் போல கொழம்பிப் போனவர்ரப் போல கண்டுக்கிடாம உக்காந்திருந்தாரு.
இந்த அளவுக்கு மோசமா எறங்கிப் பேசுவாங்கங்றது
சுப்பு வாத்தியாரு எதிர்பாக்காதது. சுப்பு வாத்தியாரு யிப்போ கொரலெடுத்துப் பேச ஆரம்பிச்சாரு.
"நாம்ம மிங்கூட்டியே வூட்டுல வெச்சிக் கேட்டப்பவே சொல்லிட்டெம். இந்தப் பஞ்சாயத்து
வாணாம்ன்னு. யிப்பிடி வெச்சி நம்மள அசிங்கம் பண்ணுதீயளே? நாம்ம கெளம்புறேம்! நீஞ்ஞ
என்னத்தெ வாணாலும் முடிவெ பண்ணிக்கிடுங்க!"ன்னு சொல்லிக் கெளம்பப் பாத்தாரு.
"எங்கடா போறே பொட்டப் பயலெ! பொட்டச்சிய
ஒளிச்சி வெச்சுக்கப் போறீயா? பஞ்சாயத்துன்னு வந்தா நின்னு பதிலெச் சொல்லிட்டுப் போடா!
ஒம் பொண்டாட்டிக்குத்தாம் ஒம் பொண்ண பெத்தேன்னா பஞ்சாயத்துல நின்னுப் பேசுடா புண்டெ
மவனே! போறதுன்னா போடா போயி வூட்டுல பொடவையச் சுத்திக்கிட்டுக் கெடடா!"ன்னாம்
சித்துவீரன் சுப்பு வாத்தியார்ரப் பாத்து. அவ்வேம் போட்ட சத்தம் ஊரு முழுக்க கேட்டுச்சு.
சுப்பு வாத்தியாருக்குக் கண்ணு செவந்துச்சு.
மாருல இதயம் துடிச்சி துடிச்சி அனுப்புற ரத்தம் அவரோட பொட்டுல போயி பொட்டு பொட்டுன்னு
அடிச்சிது. "வாடா! பேசிப் பாப்பேம்! வாங்கடா!"ன்னு திரும்பி வந்த சுப்பு
வாத்தியாரு எதிர்த்துப் போயி நின்னாரு.
"எலே நம்மள அடிக்க வரிஞ்சுக் கட்டிட்டு
வர்றாம்டா! எடுங்கடா அந்தக் கட்டக்கழிய!"ன்னாம் பெருமாள்சாமி ஊருக்கே கேக்குறாப்புல.
அந்தச் சத்தத்தெ கேட்டதும், சுப்பு வாத்தியாரு சட்டுன்னு கோயிலுக்கு ஓரமா கெடந்த ஒடைஞ்ச
கழி ஒண்ணுத்தெ ஓடிப் போயி எடுத்துக்கிட்டு நெருங்குனாரு. சனங்க சட்டுன்னு புரிஞ்சாப்புல
இந்தப் பக்கம் சுப்பு வாத்தியார்ரப் பிடிச்சிட்டுங்க. அந்தப் பக்கம் சித்துவீரன், பெருமாள்சாமியப்
பிடிச்சிட்டுங்க. அங்கங்கள ஆளுகளப் பிடிச்சிக்கிட்டு பஞ்சாயத்தே அமளிதுமளியா இருந்துச்சு.
ஆளுங்க ஒவ்வொருத்தரும் நெருங்குனதால என்னா நடக்குதுன்ன சட்டுன்னுப் புரிஞ்சிக்க முடியல.
"யப்பா! இத்துப் பஞ்சாயத்தப் போலவே
யில்ல. மொதல்ல அதிகப்பிரசங்கியா பேசுற ஆளுகளக் கெளப்புங்க!"ன்னாரு சின்னுவோட
அப்பா. அவரோட சத்தம்தாம் பெரிசா கேட்டுச்சு. ஆன்னா அவரோட கொரலுக்கு அங்க மதிப்பு
இருக்குறாப்புல தெரியல.
"அவனெ ஒதைச்சி வுட்டாத்தாம் செரிபட்டு
வரும்! அடிச்சிக் கையில கால முறிங்கடா!"ங்ற சத்தம் அங்கேயிருந்து இங்க சுப்பு
வாத்தியாரு வூடு வரைக்கும் பெருஞ்சத்தமா கேட்டுச்சு. அதெ கேட்டதும், செய்யு சத்தம்
போட்டா. "போண்ணே! யப்பாவுக்கு அஞ்ஞ ஆபத்து! நீயி போவலைன்னா நாம்ம போயி அந்தப்
பயலுகள கொல பண்ணிட்டு வந்துடுவேம்!"ன்னா. அவளோட ஒடம்பெல்லாம் துடிச்சித் துடிச்சி
அடங்குனுச்சு. “போடாம்பீ! அவர்ர தனியா போறேன்னு சொன்னப்ப வுட்டுருக்கக் கூடாது. நீயும்
போயிருக்கணும். சொல்றதெ கேட்டாத்தானே. அவரு சொல்றதத்தாம் சொல்வாரே தவுர. நாம்ம சொல்றதெ
கேக்க மாட்டாரு. இதுக்கு மேல அவரு அஞ்ஞ தனியா இருக்கக் கூடாது. போடாம்பீ சீக்கிரம்!”ன்னுச்சு
வெங்கு. “மாமாவுக்கு அஞ்ஞ ஆபத்துங்ற மாரி தெரியுது. சட்டுன்ன போஞ்ஞ!”ன்னா ஆயியும்.
விகடு ஒடனே வூட்டுலேந்து மேற்கால பஞ்சாயத்து நடந்துகிட்டு இருக்குற புள்ளையாரு கோயிலப்
பாக்க ஓடுனாம். அவ்வேம் ஓடி வர்றதப் பாத்துட்டு சனங்க “விகடு வர்றாம்ப்பா வேகமா. எதாச்சும்
ஒண்ணு கெடக்க ஒண்ணு ஆயிடப் போவுது!”ன்னு ஆளாளுக்குப் பேச ஆரம்பிச்சதுங்க. அதெ கேட்டதும்,
"பஞ்சாயத்து ரணகளம் ஆயிடும் போலருக்கு! அவனெ மொதல்ல பிடிச்சி நிப்பாட்டுங்க!"ன்னாரு
சொட்டெ கண்ணுராசு. சுப்பு வாத்தியாரும் திமிறிக்கிட்டு, "வுடுங்கடா! இன்னிக்கு
ரண்டுல ஒண்ணுப் பாத்துப்புடுவேம். நம்மள பொட்டென்னு சொன்ன பயலுகள அத்தனெ பேரும் ஒத்தைக்கி
ஒத்தெ வாரணும்! இன்னிக்கு அவனுகள வவுந்துப்புட்டுதாம் மறுவேல பாப்பேம்! அந்தப் பொட்ட
பயலோட பொண்ண அனுப்ப முடியாது. அப்பிடி அனுப்புனும்ன்னா ஒஞ்ஞ வூட்டுப் பொண்டுகள அனுப்புங்கடா
பொறுக்கி நாய்களா!"ன்னாரு சத்தம் போட்டு.
அந்தச் சத்தத்துக்கு மத்தியில விகடு ஓடி
வர்றதப் பாத்து அவனெ நாலு பேரு பிடிச்சிக்கிட்டாங்க. அந்த நேரம் பாத்து சரியா கரண்டுப்
போச்சுது. பஞ்சாயத்துல நின்ன ஆளுங்க கையில இருந்த செல்போன்ல சட்டுபுட்டுன்னு லைட்ட
அடிக்க, விகடு டக்குன்னு பிடியிலேந்து விடுவிச்சிக்கிட்டுக் கோயிலு மண்டபத்துக்குள்ள
நொழைஞ்சாம். "இத்துப் பஞ்சாயத்தெ யில்ல!"ன்னு தொண்டெ கிழிஞ்சுப் போற அளவுக்குச்
சத்தம் போட்டாம். அவ்வேம் சத்தத்தப் போட்டு சுத்திலும் பாத்தாம். ராசாமணி தாத்தா,
சித்துவீரன், பெருமாள்சாமின்னு ஒருத்தனெ கூட காணும். பட்டறைக்கார்ரேம் பட்டாமணி நழுவி
நழுவிப் போயிக்கிட்டெ இருந்தாம்.
"ன்னடா பஞ்சாயத்து இத்து? இத்துப்
பஞ்சாயத்தே கெடையாது. என்னடா நெனைச்சிக்கிட்டு இருக்கீயே?"ன்னாம் விகடு காட்டுக்கத்தலா.
அவ்வேம் சத்தத்தெ கேட்டு சனங்க ஒவ்வொண்ணா கலைய ஆரம்பிச்சிதுங்க ஏதோ அசம்பாவிதம் நடந்துடுறாப்புல.
"யேய் ந்தாரு! பெரிய மசுராட்டாம்
பேசாதே! எஞ்ஞளுக்குத்தாம்டா தெரியும், அவனுக எப்பிடிப் போட்டு புடுங்கி எடுக்குறானுவோன்னு?
வடவாதிப் பக்கமே போவ முடியல. நீஞ்ஞ ன்னடான்னா பொண்ண வூட்டுல வெச்சிக்கிட்டு எஞ்ஞள
தொங்கல்ல வுட்டுக்கிட்டு இருக்கீயே?"ன்னாரு பரமுவோட அப்பா.
"இத்தோட பஞ்சாயத்து நிப்பாட்டிக்குங்க.
எவ்வேம்டா ஒஞ்ஞள பஞ்சாயத்துப் பண்ணி வையுங்கன்னு கூப்புட்டா! காலையில வந்து நின்னப்பவே
ஒண்ணும் பேச்சுக் கெடையாதுன்னு சொல்லிட்டு இஞ்ஞ இம்மாம் பேச்ச வெச்சிக்கிட்டு இருக்கீயே?
எவ்ளோட அந்த சோசியக்கார பயலுகிட்டெ கைய நீட்டி பணத்தெ வாங்குனீயே? சரக்கும், பிரியாணியும்
வாங்கிக் கொடுத்தா அந்தப் பக்கம் பேச ஆரம்பிச்சிடுவீங்களா? இஞ்ஞ வாய வந்து ஊதுங்கடா
பாப்பேம்! எத்தனெ பேரு வாயில சரக்கு வாடை இல்லன்னு பாப்பேம்! இனுமே பஞ்சாயத்துன்னு
எவனாச்சும் எஞ்ஞ வூட்டுப் பக்கம் காலடி எடுத்து வெச்சானுவோ கால வெட்டிப் புடுவேம்!"ன்னாம்
விகடு ஆவேசமா.
"யேய் ஊரு வேணும்! பாத்துப் பேசு!
எள்ளக் கொட்டுனா பொறுக்கிப் புடலாம். சொல்லக் கொட்டன்னா பொறுக்கிட முடியாது! பின்னாடி
நெனைச்சு நெனைச்சு வருந்துறாப்புல ஆயிடும்!"ன்னாரு சொட்டெ கண்ணுராசு எச்சரிக்கிறாப்புல.
"ன்னடா பண்ண முடியும் ஒங்களால? பண்ணுங்கடா!
ஊர்ர வுட்டு ஒதுக்கி வைக்கத்தானே முடியும்! ஒதுக்கி வையுங்கடா! நீஞ்ஞ ன்னடா நம்மள ஊரே
வுட்டு ஒதுக்கி வைக்குறது? நாம்ம ஒதுக்கி வைக்கிறேம்டா ஒஞ்ஞள? எவனாச்சும் இனுமே இந்த
ஊர்லேந்து எஞ்ஞ வூடு சம்பந்தமா வாஞ்ஞடா அப்பே வெச்சிக்கிறேம். இன்னிலேந்து இந்த ஊருக்கும்
செரித்தாம், எஞ்ஞ வூட்டுக்கும் செரித்தாம் எந்தத் தொடர்பும் கெடையாது. எந்தப் பயலும்
எம்மட வூட்டு வாசல்ல மிதிக்க கூடாது!"ன்னு சொன்னவேம் சட்டுன்னு அப்பங்காரரான
சுப்பு வாத்தியார்ர கையப் பிடிச்சி வேகு வேகுன்னு அழைச்சாந்தாம். சுப்பு வாத்தியாரு
அவ்வேம் கைய விடுவிச்சுக்கிட்டு பஞ்சயாத்து ஆளுங்ககிட்டெ ஏதோ பேச வாயெடுத்தாரு. விகடு
நேரா போயி அவரோட வாயப் போத்தி, கையப் பிடிச்சி, "யிப்போ ஒழுங்கு மருவாதியா
வூட்டுக்கு வர்றீயளா? யில்லன்னா இனுமே மனுஷனா இருக்க மாட்டேம்!"ன்னு சத்தத்தப்
போட்டாம். அவ்வேம் அப்பிடிப் பேசுனதப் பாத்து சுப்பு வாத்தியாரு ஒரு நொடி அதிந்துதாம்
போனாரு. சட்டுன்னு சுப்பு வாத்தியாரு கயித்துல கட்டி இழுத்துக்கிட்டு வர்ற ஆட்டுக்குட்டியாட்டம்
மவ்வேம் பின்னாடியே வந்தாரு. அவுங்க ரண்டு பேரும் வீட்டுக்குள்ள நொழையுறதுக்கும், கரண்டு
வர்றதுக்கும் சரியா இருந்துச்சு. வீட்டுக்கே வெளிச்சம் வந்தாப்புல இருந்துச்சு.
வூட்டுக்குள்ள வந்த விகடு கதவெ இழுத்துச்
சாத்தி உள்ளார பூட்டுனாம். என்னவோ ஏதோ நடக்கப் போவுதுன்னு படபடபப் சனங்க பின்னாடி ஓடி
வந்து கதவெ தட்டுனுச்சுங்க. கதவெ தொறக்கக் கூடாதுன்னு சொல்லிட்டு எல்லாரையும் வூட்டுக்குள்ள
கூப்புட்டு உக்கார வெச்சாம். அதுக்குள்ள சனங்க ஒவ்வொண்ணும் கொல்லப் பக்கமா பூந்து
வூட்டுக்குள்ளார வந்து, கதவெ தொறந்து விட்டுச்சுங்க. உள்ளார வந்த பொண்டுகள மட்டும்
விகடு ஒண்ணும் சொல்லல. ஆம்பளைக உள்ளார வந்தப்போ, "அந்தாண்டப் போங்கடா! ஒஞ்ஞள
யாருடா உள்ளாரக் கூப்புட்டது?"ன்னாம் விகடு.
"யப்பாடி ஆத்திரப்படாதே! இவ்ளோ நாளு
ஆத்திரப்படாம இருந்தது முக்கியமில்ல. இனுமே ஆத்திரப்படாம இருக்கணும். ஒந் தங்காச்சிய
அனுப்ப விருப்பம் இல்லன்னா அத்தோட வுட்டுப்புட வேண்டித்தானே. அதெ வுட்டுப்புட்டு ஏம்
அதுக்குக் கோவப்படுறே?"ன்னாங்க ஆம்பளைங்க.
"மருவாதியா வெளியிலப் போயிடுங்கடா!
ல்லன்னா அசிங்கப்படுறாப்புல ஆயிடும்!"ன்னாம் விகடு.
"நம்ம ஊருப் பயதானடா நீயி! நீயி அசிங்கப்படுத்துறதால
நாம்ம ஒண்ணும் அசிங்கப்பட்டுட மாட்டேம்!"ன்னாங்க அவுங்க.
ஒடனே விகடு அவுங்களோட கைகளப் பிடிச்சிக்
கொண்டுப் போயி ஒவ்வொருத்தரா தெருவ நோக்கி வெளியில தள்ளுனாம். தள்ளிக் கதவச் சாத்தித்
தாழ்ப்பாளப் போட்டாம். வெங்கு, ஆயி எல்லாம் ஓடியாந்து அவ்வேம் பக்கத்துல நின்னுச்சுங்க.
அதுங்களுக்கு என்னத்தெ பண்ணுறதுன்னு புரியல். நெமெ திடீர்ன்னு இவ்ளோ சிக்கலாவும்ன்னு
அதுங்க எதிர்பாக்கல. "இன்னியோட முடிஞ்சுது இந்த ஊருக்கும் நமக்கும் இருக்குற
சம்பந்தம்! இனுமே இந்த ஊரு சம்பந்தமா எஞ்ஞ குடும்பத்துக்கு எந்தத் தொடர்பு இல்ல. எஞ்ஞ
குடும்பம் சம்பந்தமாவும் இந்த ஊருக்கு எந்தச் சம்பந்தமும் யில்ல!"ன்னாம் விகடு.
"யோஜிச்சுப் பேசு. நாளைக்கு நல்லது
கெட்டதுன்னா ஊருலேந்து நாலு பேத்து வந்து நிக்கணும்!"னாங்க வூட்டுக்கு வெளியில
நின்ன கிராமத்துல இருக்குறவங்க.
"செஞ்சு கெட்டது போதும்டா கிராமத்துலேந்து.
ஒஞ்ஞளுக்குல்லாம் நல்லது பண்ணுறதே தெரியாது. ஒரு குடும்பத்தெ அழிக்கணும்ன்னு எத்தனெ
நாளுடா கங்கணும் கட்டிட்டு நின்னீயே? நாஞ்ஞத்தாம் படிச்சிப் படிச்சிக் காலையில சொன்னேம்மடா
இந்தப் பஞ்சாயத்து வாணாம்ன்னு வாணாம்ன்னு! பெறவு ஏம்டா சொன்னதெ கேக்காம அதெ வெச்சீங்க?
ஒஞ்ஞ எளவெடுத்த வறட்டு கெளரவத்துக்கு எஞ்ஞ குடும்பந்தாம் பலிகடாவா கெடைச்சதாடா? போஞ்ஞடா
போயி ஒஞ்ஞ குடுபம்த்தப் பாருங்கடா! எஞ்ஞ குடும்பத்தையே பாத்துட்டு நிக்காதீயே! ஒஞ்ஞ
குடும்பத்துல இப்பிடின்னா அதெ பேசுங்கடா! எதுக்கடா எஞ்ஞ குடும்பத்துக்குப் பேச நிக்குதீயே?
யாரு வந்துடா ஒஞ்ஞளா பேசக் கூப்புட்டது? ஓசி சண்டைன்னா, ஓசியில குடி கெடுக்குறதுன்னா
ஆளாளுக்கு கௌம்பி வந்துப்புடுவீங்களடா?"ன்னாம் விகடு. வெளியில நின்ன ஆளுங்க பல
வெதமா பேசி விகடுவெ சமாதானம் பண்ணப் பாத்ததுங்க. சின்னுவோட அப்பா மட்டும், “அவனெ பேச
வுடுங்கடா! அவ்வேம் பேசுனாத்தாம் அடங்குவாம்!” ன்னாரு.
"யம்பீ! யிப்பிடில்லாம் பேசதடா! நமக்குப்
பயமா இருக்கு!"ன்னுச்சு வெங்கு.
"உள்ளாரப் போயிடு! யம்மான்னு பாக்க
மாட்டேம்! எல்லாத்தையும் தலைக்கு மேல போவ வுட்டுப்புட்டு, நமக்கு வந்துப் புத்திச்
சொல்லிட்டு இருக்கீயா? யம்மான்னு கூட பாக்க மாட்டேம்! போயிடு அந்தாண்ட!"ன்னாம்
விகடு.
"நமக்குப் பயமா இருக்குங்க! கோவப்படாதீயே!"ன்னா
ஆயி.
"எல்லாம் நமக்குத் தெரியும்டீ! போடீ
உள்ளார! இந்தப் பஞ்சாயத்துப் பயலுவோ கூட்டுச் சேந்துக்கிட்டு அழிக்கப் பாக்குறானுவோடீ!"ன்னாம்
விகடு. ஆயி வாயப் பொத்திக்கிட்டு உள்ளாரப் போனா.
விகடு சட்டு சட்டுன்னு உள்ளார வர் வர கதவெ
ஒவ்வொண்ணா சாத்திட்டு பட் பட்டுன்னு லைட்ட அணைச்சாம். அன்னிக்கு பன்னெண்டு மணி வரைக்கும்
தெரு சனங்க வூட்டுக்கு மின்னாடி அலுத்துப் போவுற அளவுக்குப் பேசிட்டெ நின்னுச்சுங்க.
விகடு கடெசீ வரைக்கும் வெளியில வரவும் இல்ல. லைட்டப் போடவும் இல்ல. வூடு அப்பிடியே
விடிய விடிய இருண்டு கெடந்துச்சு. வூட்டுல இருந்த சனங்க ஒவ்வொண்ணும் உக்காந்தது உக்காந்தப்
படியே இருந்துச்சுங்க. யாரும் யாருகிட்டெயும் பேசிக்கிடல. எப்போ தூங்குனோம்ன்னு தெரியாம
உக்காந்தப்படியே தூங்குனுச்சுங்க. காலங் காத்தால பொழுது விடிஞ்சி வெளிச்சம் வந்து
சுள்ளுன்னு மூஞ்சுல அடிக்கிற வரைக்கும் தூக்கந்தாம். வூட்டுக்கு மின்னாடி வாசத் தெளிச்சி
கோலம் போடக் கூட யில்ல. வாசல் இப்பிடி கூட்டாம கொள்ளாம, கோலம் போடாம கெடக்குதுன்னே
அதெ பாக்கவும் ராத்திரி ரொம்ப நேரம் பேசிட்டுத் தூங்கப் போன சனங்க முழிச்சதும் வாசல்
மின்னாடி வந்து நின்னுப் பேசிக்கிட்டு நின்னுச்சுங்க.
*****
No comments:
Post a Comment