17 Oct 2020

விவாதத்தைச் சீரணித்தல்


 சரக்கு உனக்கு நண்பா

நல்ல வேளை

தூங்கி எழுந்த பின்

நினைவுக்கு வருகிறது

தூக்க மாத்திரைப் போட மறந்தது

அதிர்ஷ்டக்காரன்தான்

கல்யாணம் முடிந்ததற்குப் பின் வருகிறது

காதலியின் திருமணப் பத்திரிகை

கட்டம் பரவாயில்லை

போதை ஏற்றாத மினரல் வாட்டருக்கே

மட்டையாவது

சரக்கை நீ குடித்து விடு நண்பா

*****

விவாதத்தைச் சீரணித்தல்

உன் டிபன் பாக்ஸை எடுத்துத் தின்றது

என் தப்பு என்கிறாய்

என் டிபன் பாக்ஸை எடுத்துத் தின்னாது

உன் தப்பு என்கிறேன்

போதும்

தயவுசெய்து வாக்குவாதத்தை நிறுத்து

தவறு நிகழ்ந்தது நிகழ்ந்து விட்டது

இப்போதாவது என் டிபன் பாக்ஸை

என்னைத் தின்ன விடு

*****

No comments:

Post a Comment

குழு அமைக்கும் நேரம்!

குழு அமைக்கும் நேரம்! முடியும் என்றும் சொல்ல முடியாது முடியாது என்றும் சொல்ல முடியாது அப்போது அம்மா பிள்ளைகளிடம் சொல்வாள் “அப்பாவிடம...