ரெண்டாவது பஞ்சாயத்து!
செய்யு - 598
ரெண்டாவது பஞ்சாயத்துக்கு தன்னோட சொந்தப்
பந்தங்க எல்லாத்தையும் கூப்புட்டு வெச்சு பேசுறதுன்னு முடிவெ பண்ணுனார் சுப்பு வாத்தியாரு.
பஞ்சாயத்துன்னுப் போறதுக்கு மின்னாடி அப்பிடி ஒரு பேச்சு வார்த்தெதாம் ரெண்டு பக்கத்துச்
சொந்தப் பந்தங்களுக்கும் இடையில நடக்கும். அதுல ஒரு முடிவு எட்டாதப்ப பஞ்சாயத்துல
போயி நிக்குறது உண்டு. இங்க நடக்குறது அப்பிடியே நேர்மாறா இருந்துச்சு. பஞ்சாயத்துக்குப்
பெறவு சொந்தப் பந்தங்கள கொண்டாந்து வெச்சு பஞ்சாயத்துல பேசுறாப்புல ஆயிடுச்சு. சுப்பு
வாத்தியாரு போன் போட்டுச் சொன்னதுல சந்தானம் அத்தான் சென்னைப் பட்டணத்துலேந்து கார்ல
வந்து எறங்குனுச்சு. வந்தது சும்மா வாரல. தங் கூட தனக்குத் தெரிஞ்ச கட்சிக்கார ஆளுகளோடயும்,
தன்னோட ஆட்களோடயும் வந்துச்சு. அண்ணன் மவனான பரசுவுக்கும் சுப்பு வாத்தியாரு வாரச்
சொல்லி போன் பண்ணிருந்தாரு. பரசு அண்ணனும் தனக்குத் தெரிஞ்ச பிரபல்யமான கட்சிக்காரரோடயும்
கூட கொஞ்சம் ஆட்களோடயும் வந்து எறங்குனுச்சு. பெரிய பட்டாளமே வந்து சுப்பு வாத்தியாரு
வூட்டுல வந்து எறங்குன சங்கதியக் கேள்விப்பட்டு பத்து மணிக்குப் பஞ்சாயத்துக்கு ராசாமணி
தாத்தா தரப்புலேந்து யாரும் வாரல.
வரட்டும்ன்னு எல்லாமும் உக்காந்து காத்திருந்தாங்க.
அந்த நேரத்துல என்ன பெரச்சனெங்றதெ எல்லாரும் எல்லாருகிட்டெயும் பேசிக்கிட்டும் கலந்துகிட்டும்
இருந்தாங்க. பேசப் பேச என்ன நடந்துருக்குங்றது எல்லாருக்கும் பிடிபட்டுப் போச்சு. செய்யுவையும்
கூப்புட்டு நல்லா வெசாரிச்சிக்கிட்டு அவ்வே மனசுல உள்ளதெ கேட்டுக்கிட்டாங்க. யிப்போ
அவ்சரப்பட்டு எந்த முடிவுக்கும் வந்துப்புட வாணாம்ன்னும், பஞ்சாயத்துல வந்து அவனுகப்
பேசட்டும் அதெ வெச்சு ஒரு முடிவுக்கு வருவோமோன்னும் எல்லாரும் ஒரு முடிவெ பண்ணிக்கிட்டு
பஞ்சாயத்துக்காக எல்லாரும் காத்துகிட்டு இருந்தாங்க. காத்திருக்க காத்திருக்க நேரந்தாம்
ஆவுதே தவுர ஆட்கள் வந்தப் பாடில்ல. அப்பிடியே பன்னெண்டு மணி வரைக்கும் ஆயிடுச்சு. அப்பத்தாம்
சுப்பு வாத்தியாரு பஞ்சாயத்தார்களப் பாத்துச் சொன்னாரு, "சொந்தப் பந்தங்க எல்லாம்
வந்துக் கெடக்காங்க. வந்தாங்கன்னா பேசி முடிச்சிப்புட்டு அவுங்களையும் அனுப்பிச்சிப்புடலாம்.
நேரமாயிட்டெ இருந்தா அவுங்கள கெளப்பி வுடுறதுக்கும் நேரமாயிட்டே இருக்கும். இந்தக்
காரியத்துக்குன்னு வந்தவங்கள எம்மாம் நேரந்தாம் காக்க வெச்சிட்டுக் கெடக்குறது?"ன்னு.
அது வரைக்கும் பிரக்ஞ யில்லாம கெடந்து
அப்பத்தாம பிரக்ஞ வந்தவர்ரப் போல சொட்டெ கண்ணுராசு ராசாமணி தாத்தாவுக்குப் போன அடிச்சாரு.
அதுக்கு ராசாமணி தாத்தா, எல்லாரும் வந்து வடவாதியிலத்தாம் இருக்குறதா சொன்னுச்சு.
“அங்க வந்து உக்காந்துக்கிட்டா எப்பிடி? இஞ்ஞ பஞ்சாயத்துக்கு வாரணுமா இல்லியா?”ன்னாரு
சொட்டெ கண்ணுராசு. அதுக்கு அவுங்க தரப்புல வந்துட்டா சொல்லுங்க, ஒடனே வந்துப்புடுறதா
சொன்னுச்சு ராசாமணி தாத்தா ஒண்ணும் அறியாததப் போல. "அதெல்லாம் வர்ற வேண்டியங்க
எல்லாம் வந்து ரண்டு மணி நேரமா காத்துக்கிட்டுக் கெடக்காங்க. நீஞ்ஞ பாட்டுக்கு அங்க
உக்காந்துட்டுக் கெடந்தா என்னத்தெ பண்ணுறது? வந்தீயன்னா பஞ்சாயத்தப் பாத்துப்புட்டு
அவுங்கவுங்க பொழப்ப பாக்க போவமா இல்லியா?"ன்னாரு சொட்டெ கண்ணுராசு. ஒடனே வர்றதா
சொல்லிட்டு போன வெச்சது ராசாமணி தாத்தா. அது சொன்ன கொஞ்ச நேரத்துலயே சித்துவீரனோட
டிவிஸெ்ஸூ எக்செல்லல ஒவ்வொரு ஆளா வந்து எறங்கிகிட்டெ இருந்துச்சுங்க. எல்லா சனமும்
வந்து எறங்குறதுக்குள்ள மணி ஒண்ணுக்கு மேல ஆயிடுச்சு.
சுப்பு வாத்தியாரு வூட்டுல வந்திருந்தவங்களுக்கு
மத்தியானச் சாப்பாடெல்லாம் தயாரா இருந்துச்சு. அதெ சாப்புட்டு முடிச்சிப்புட்டுப் பஞ்சாயத்துக்குப்
போவலாம்ன்னு நெனைக்குறப்பத்தாம், அவுங்க தரப்புலேந்து எல்லாரும் வந்துப்புட்டாங்க,
கோயிலுக்கு வந்துப்புடுங்கன்னு சொல்லிட்டு பரமுவோட அப்பா போனாரு. சாப்புட உக்காரலாம்ன்னு
நெனைச்ச சனங்க எல்லாம் கெளம்பி புள்ளையாரு கோயிலு பக்கமா போனுச்சுங்க. சந்தானம் அத்தானும்,
பரசு அண்ணனும் தான் கொண்டாந்த கட்சிகளோட பெரும்புள்ளிகளக் கொண்டுப் போயி முக்கியமான
எடத்துல உக்கார வெச்சதுங்க. அதெப் பாத்ததுமே பாக்குக்கோட்டையானுங்க மெரண்டுப் போனானுங்க.
பெருமாள்சாமி கொஞ்சம் அடக்கி வாசிக்குறாப்புல கோயிலு மண்டபத்துக்கு உள்ளார வர்றாம
வெளியில பம்மிகிட்டுப் போனாரு.
பஞ்சாயத்து ஆரம்பமானுச்சு. ஒருத்தரு மொகத்த
ஒருத்தரு பாத்துட்டு உக்காந்திருந்தாங்க. பஞ்சாயத்துன்னு அதுக்கு ஒரு ஆரம்பம் வேணுமில்ல.
யாராச்சும் ஒருத்தரு பேச்ச ஆரம்பிக்கணுமில்ல. "ஒரு கருத்தெ இஞ்ஞ உறுதியோட சொல்லிடறேம்.
சேத்து வைக்கணும்ன்னாத்தாம் இந்தப் பஞ்சாயத்து. மனசுக்குள்ள ஆயிரத்தெட்டு பிடிச்சது,
பிடிக்காதது இருக்கலாம். பிடிச்சதெ சேத்துக்கிட்டு, பிடிக்காததெ வெலக்கிட்டு சரிபண்ணிக்கிடணும்.
அதுக்கு இந்தப் பஞ்சாயத்துல என்னத்தெ பண்ண முடியுமோ. அதெ பண்ணுறோம். ஒரு பஞ்சாயத்து
நடந்து முடிஞ்ச வகையில ரண்டு குடும்பத்துலேந்தும் செலதெ பேசி முடிவெ பண்ணிருப்பீங்க.
பஞ்சாயத்தோட முடிவு என்னாங்றதெ நாம்ம மொதல்லயே சொல்லிப்புட்டதால அதெ மேக்கொண்டு
மேக்கொண்டு ரண்டு பேத்தையும் சேத்து வைக்குறதுக்குத்தாம்ன்னு சொல்ல வேண்டியதில்லன்னு
நெனைக்குறேம். இதெப் புரிஞ்சிகிட்டு ரண்டு தரப்புலேந்தும் ஒருத்தரு வந்து ஒஞ்ஞ கருத்தெ
சொல்லிப்புடுங்க! அதுக்குப் பெறவு என்னத்தெ பண்டலாங்றதெ ஒரு முடிவுக்குக் கொண்டு
வந்துப்போம்!"ன்னு சொட்டெ கண்ணுராசு பேசி ஆரம்பிச்சாரு.
சுப்பு வாத்தியாரு தரப்புலேந்து சந்தானம்
அத்தான் கண்ணு காட்டு அது அழைச்சிட்டு வந்த கட்சிக்கார ஆளு பேச ஆரம்பிச்சாரு,
"பொண்ணுகிட்டெ நாஞ்ஞ பேசிப்புட்டெம். ஏற்கனவே ஒரு பஞ்சாயத்து வேற நடந்திருக்கு.
அதுலேந்து சில விசயங்க தெளிவாகுது. மாப்ள வூட்டுச் சனங்க பக்கத்துல சில தப்புக இருக்கு.
சில விசயங்கள்ல பொண்ணோட மனசு நோகுறாப்புல கொடுமெ பண்ணிருக்காங்க!"ன்னு சொல்றதுக்குள்ள,
லாலு மாமா குறுக்கிட்டு, "இப்பிடில்லாம் சபெயில அபாண்டமா பழியச் சொல்லக் கூடாது.
பொண்ண சேத்து வாழ வைக்க விரும்ப்பமில்லன்னா அதெ சொல்லிப்புடணும்!"ன்னுச்சு திடீர்ன்னு
பட்டாசு ஒண்ணு எக்குதப்பா வெடிக்குறாப்புல ஆக்குரோஷமா.
"பேசுறப்ப குறுக்கால வந்தா என்னத்தெ
சொல்லுறது? ஒண்ணு அந்த ஆளு பேசி முடிச்சிடட்டும். யில்ல நாம்ம பேசி முடிச்சப் பெறவு
அந்த ஆளு பேசட்டும். என்னத்தா பண்ணலாம்ன்னு பஞ்சாயத்துல நீஞ்ஞளே சொல்லுங்க?"ன்னாரு
கட்சிக்கார ஆளு.
"நீஞ்ஞ பேசி முடிங்க. பெறவு எதுவா
இருந்தாலும் லாலு வாத்தியாரு பேசட்டும்!"ன்னு பரமுவோட அப்பா சொன்னதும் லாலு மாமா
கப்சிப்புன்னு ஆனது. அதுக்கு மொகத்து அடிச்சாப்புல போயிடுச்சு. இப்போ திரும்ப கட்சிக்கார
ஆளு தொடந்தாப்புல பேச ஆரம்பிச்சாரு, "அதெப் பாத்தீங்கன்னா, நாம்ம பொண்ணு வூட்டுத்
தரப்புல பேசுறப்போ சில வெசயங்க தெரிய வந்துச்சு. அவுங்க காரு வாங்கன்னு கொடுத்தக்
காசியில கார்ரே வாங்கல. போட்ட நகெ நட்டுல ஒண்ணுத்தெ கூட பொண்ணுக்குப் போட்டுப் பாக்க
கொடுக்கல. இதெயெல்லாம் மொதல்ல தீத்துப்புடணும். அதுக்கு என்னத்தெ காரணம்? ஏது காரணம்ன்னு
பொய்யில்லாம இந்த ஆண்டவெம் சந்நிதியில உண்மையச் சொல்லிப்புடணும். பெறவு பொண்ணு புள்ளையளோ
வெசாரிக்கணும். எப்பிடிச் சேந்து வாழ விருப்பமா? மனசுக்குள்ள என்னா கொறையேதும் இருக்கான்னு.
பெறவுதாம் நாம்ம ஒரு முடிவுக்கு வர்ற முடியும். இதாங் எங்க தரப்புல நாங்க சொல்லுறது.
இதுல ஆட்சேபனெ இருக்கும்ன்னா பஞ்சாயத்துல அதுக்கேத்தாப்புல முடிவெ பண்ணிக்கிடலாம்!"ன்னு
பேசி முடிச்சாரு அந்தக் கட்சிக்காரரு.
பாக்குக்கோட்டை தரப்புலேந்து லாலு மாமா
யிப்போ பேச ஆரம்பிச்சுது. "பணங்காசி, நகெ நட்டுப் பத்தி செலதெ கேட்டாங்க. இதுக்கானப்
பதில போனப் பஞ்சாயத்துலேயே சொல்லியாச்சு. இருந்தாலும் போன பஞ்சாயத்துக்கு வர்றாத
சில பேத்து இஞ்ஞ வந்திருக்கிறதால அதெ மறுக்கா சொல்ல வேண்டிக் கெடக்கு. பத்து லட்சம்
காசியும் பாங்கியிலத்தாம் பத்திரமா கெடக்குது. எப்ப வாணாலும் எடுத்தாந்து தர்ற தயாரு.
நகெ நட்டுல ஒரு சிலதெ கொஞ்சம் அடவுல இருக்கு. மாப்புள்ளைக்கு அவ்வேம் தங்காச்சியோட
கலியாணத்தெ முடிச்ச வகையில சில கடனுங்க இருந்ததால, ஏம் கடனோட இருக்கணுங்றதுக்காக அதெ
வெச்சிருக்காம். சொன்னீங்கன்னா அதெ மூட்டுக் கொண்டாந்து தர்றதுலயும் பெரச்சனெ யில்ல!
இந்த வேலைப்பாடுகளெ செய்யுறதுக்குக் கொஞ்சம் அவகாசம் வேணும். பொண்ணு புள்ளையோள வெசாரிக்கணும்ன்னா
தாரளமா வெசாரிச்சுக்கோங்க!"ன்னுச்சு லாலு மாமா.
"அதெப்படி பொண்ணுக்குன்னு போட்டதெ
மாப்ளக்கார்ரேம் அவ்வேம் பாட்டுக்கு அடவு வைக்குறது?"ன்னுச்சு சந்தானம் அத்தான்.
"பவுனெ போட்டு வுட்டுப்புட்டா அத்து
மாப்ளெ வூட்டுக்காரனோடது ஆவுது. அதெ ன்னா பண்ணணுங்றதுல்லாம் அவுங்க முடிவுத்தாம்.
நாஞ்ஞ அடவு வெச்சிப்போம், வூட்டுல வெச்சிப்போம். அதெப் பத்தில்லாம் கேக்கக் கூடாது!"ன்னுச்சு
ராசாமணி தாத்தா.
"பணங்காசி, நகெ, நட்டுல்லாம் பெரிய
விசயமில்ல. பொண்ணு புள்ளய சேக்குறதுதாங் முக்கியமானதுங்றதால அதெ அடுத்ததா வெச்சிப்போம்.
யிப்போ பொண்ணு புள்ளைய வெசாரிக்கிறதெப் பத்தி பேசிக்கிடணும். அதுதாங் இதுல முக்கியம்.
அதுல ஒரு முடிவு தெரிஞ்சாத்தாம் மேக்கொண்டு பேச முடியும். அதெப் பத்தி பேசிக்கிடுவோம்!"ன்னாரு
சொட்டெ கண்ணுராசு.
"நம்ம தெரு பொண்ண கொண்டாந்து பஞ்சாயத்துலல்லாம்
வெசாரிக்க முடியாது! அதெல்லாம் நடப்புக்குச் சுத்தப்பட்டு வாராது! அப்பிடி ஒண்ணுத்தெப்
பண்ணா பஞ்சாயத்தையே உண்டு இல்லன்னு பண்ணிப்புடுவேம்ன்னு!" சத்தத்தெ வெச்சுச்சு
இந்தத் தெருவுலயே மேற்கால கடெசீயா இருக்குற மகேந்திரம். ஆளு நல்ல குடியில புல் போதையில
இருந்துச்சு.
"ன்னடா பஞ்சாயத்தெ பண்டிட்டு இருக்கீயே?
மாப்ளே வூட்டுக்கார்ரேம் வந்துக் கூப்புட்டா பொண்ண அனுப்பி வுட்டுப்புட்டு போவ வேண்டித்தானடா.
இதுக்குப் போயி மொத ஒரு பஞ்சாயத்துப் பத்தாதுன்னு இப்போ ஒரு பஞ்சாயத்தெ வெச்சி ஊருக்காரனோட
நேரத்தையெல்லாம் வீணடிச்சிட்டு இருக்கீயே?"ன்னு இதுக்கு வூடால பூந்து இந்தத் தெருவுலயே
கெழக்கால இருக்குற கடெசீ வூட்டுக்கு மின்னாடி இருக்குற வெங்கடேசன் கேட்டுச்சு. அதுவும்
குடியில புல் போதையிலத்தாம் இருந்துச்சு.
இதெ கேட்டுக்கிட்டு, "இந்தக் குடிகார
பயலுவோள எவ்வேம்டா பஞ்சாயத்துக்கு வாரச் சொன்னது? வந்ததும் யில்லாம கண்டமேனிக்குப்
பேசிட்டு நிக்குறானுவோ?"ன்னாரு சின்னுவோட அப்பா.
"யப்போ ஊர்ல நாஞ்ஞ யில்லியா? நாஞ்ஞ
பேயக் கூடாதா? பஞ்சாயத்துன்னு வந்துப்புட்டா ஊர்ல இருக்குற அத்தனெ பேருந்தாம் பேசுவாம்.
அதாங் பஞ்சாயத்து. நீஞ்ஞ மட்டும் உக்காந்துட்டுப் புண்டையில ஒழுக்குறதுக்கு ன்னடா பெரிய
பஞ்சாயத்து?"ன்னு மகேந்திரம் சத்தத்தெ வைக்க, அதெ அந்தாண்ட அழைச்சிட்டுப் போவச்
சொல்லி ஊருக்கார பெரிசுக சாடையக் காட்டுன்னுச்சுங்க. நாலு பேத்து சேந்துகிட்டு மகேந்திரத்தெ
தள்ளிக்கிட்டுப் போனுச்சுங்க. "வுடுங்கடா தேவிடியா பயலுகளா? அவுனுவோ மட்டும்
பெரிய புழுத்தியோளா? அவனுக சொல்றது மட்டுந்தாம் பஞ்சாயத்தா? என்னவோ அவனுகளுக்கு மட்டுந்து
ஓலுறதுக்குச் சுன்னி இருக்குறாப்புலயும், நமக்கெல்லாம இல்லங்ற மாரிக்கு ஞாயம் வைக்குறானுவோ?"ன்னு
சத்தத்தெ வெச்சிக்கிட்டெப் இழுத்த இழுப்புக்குப் பிடிபடாம திமிரிக்கிட்டெப் போனுச்சு
மகேந்திரம்.
வெங்கடேசத் தள்ளிக் கொண்டு போறப்ப அதுவும்
சத்தத்தெப் போட்டுச்சு. "ஒக்கால ஓலிகளா என்னத்தடா பஞ்சாயத்தெ வைக்குதீயே? நம்ம
ஊருக்கார பஞ்சாயத்துன்னா நம்ம ஊருக்காரப் பயலுகத்தானே இருக்கணும். எவனெவனயோ கொண்டாந்து
வெச்சிக்கிட்டு நீஞ்ஞ பம்மிக்கிட்டு என்னத்தடா பஞ்சாயத்தப் பண்டுறீயே?"ன்னு. அதுக
ரண்டு பேத்தையும் அந்தாண்ட கொண்டுப் போன பெற்பாடுதாங் பஞ்சாயத்துல கொஞ்சம் அமைதி
உண்டானுச்சு.
"பஞ்சாயத்துக்கு வந்திருக்குற யாரும்
தப்பா நெனைச்சிப்புடக் கூடாது. ஊர்ல இப்பிடித்தாம் நாலு பேத்து குடிச்சிப்புட்டு, பெரச்சனைய
பண்டுறதுக்குன்னு இருக்குறானுவோ. அவனுகளயும் சேத்து வெச்சித்தாம் கிராமத்துல வாழ வேண்டிக்
கெடக்கு. அவனுக குடிச்சிட்டுப் பேசுனதெ யாரும் பெரிசா மனசுல வெச்சிக்கிட வேண்டியதில்ல.
நாம்ம மேக்கொண்டு பேசுவோம்!"ன்னாரு சொட்டெ கண்ணுராசு வந்திருக்கிறவங்கள சமாதானம்
பண்ணுறாப்புல.
"பொண்ணு புள்ளைகளப் போயி பஞ்சாயத்துல
கொண்டு வெச்சு வெசாரிக்க வேண்டியதில்லே. பஞ்சாயத்துலேந்து ரண்டு பேத்த அனுப்பி என்னா
ஏதுன்னு வெவரத்தெ அதுககிட்டெ ஒரு வூட்டுல வெச்சு வெசாரிப்பேம். இப்பதாங் கலியாணம் ஆன
போண்ணு. அதெ கொண்டாந்து பஞ்சாயத்துல நிப்பாட்டி ஆளாளுக்கு வெசாரிச்சா சங்கடந்தாம்
வந்து சேரும்! யிப்போ ரண்டு குடிகாரக் கம்முனாட்டிங்க பேசுனதெ நீஞ்ஞளே பாத்தீங்க. அதால
நாம்ம சொல்ற அதாங் நல்ல மொறைன்னு நாம்ம நெனைக்குறது. இதுக்கு மாறுபாடு யிருந்தா சொல்லிப்புடுங்க!"ன்னாரு
பரமுவோட அப்பா தொடந்தாப்புல.
"யப்போ மாப்புள்ளையையும் அப்பிடித்தாம்
வெசாரிக்கணும். பஞ்சாயத்துல வெச்சில்லாம் வெசாரிக்கக் கூடாது!"ன்னுச்சு லாலு மாமா
பட்டுன்னு எழுந்திரிச்சி.
"ரண்டுப் பேத்துக்குமே அப்பிடித்தாம்!"ன்னாரு
பரமுவோட அப்பா அதுக்கு வௌக்கம் சொல்றாப்புல.
"அதுக்கு மின்னாடி ஒரு விசயத்தெ நாம்ம
சொல்ல விரும்புறோம். பொண்ண வெசாரிக்கிறப்போ எஞ்ஞ தரப்புலேந்து ரண்டு பேர்ர அனுமதிக்கோணும்.
ஏன்னா பொண்ணு என்னத்தெ சொல்லுதுங்றது நம்ம தரப்புக்குத் தெரிஞ்சாவணும். இதுக்காகப்
பஞ்சாயத்து மேல சந்தேகம்ன்னு நெனைச்சிப்புட படாது. ஏன்னா அதுதாங் செரியான மொறெ. அதெப்
போல மாப்புள்ளப் பையனெ வெசாரிக்கிறப்போ பொண்ணு வூட்டுத் தரப்புலேந்து ரண்டு பேத்த
வெச்சிக்கிடட்டும். ஏன்னா ரண்டு பக்கமும் என்ன வெசாரனெ ஆவுது? அதுக்கு என்னெ பதிலு
வருதுங்றது ரண்டு பக்கத்துக்கும் தெரிஞ்சாவணும். அதுவும் சந்தேகத்து எடமில்லாம தெரிஞ்சாவணும்.
எஞ்ஞளுக்குப் பொருத்த வரைக்கும் வாழ வைக்கணும்ன்னு சொன்னாலும் செரித்தாம். யில்லே
அத்து வுட்டுப்புட்டு போடான்னாலும் செரித்தாம். நாஞ்ஞ ரண்டுக்கும் தயாராத்தாம் வந்திருக்கேம்!"ன்னுச்சு
லாலு மாமா பொளந்துக் கட்டுறாப்புல.
"இந்தாருங்க லாலு வாத்தியாரே! மிங்கூட்டியே
சொன்னதுதாங். சேத்து வைக்குறதுன்னாத்தாம் இந்தப் பஞ்சாயத்துல்லாம். அத்து வுடுறதுன்னா
அதுக்குன்னு இருக்குற எடத்துக்குப் போயிக்குங்க. அந்தப் பாவக் காரியத்தெ இந்தப் பஞ்சாயத்துல
வெச்சி செய்யுறாப்புல வெச்சிப்புடாதீங்க. பேசுறப்ப கொஞ்சம் யோஜனெ பண்ணிப் பேசுங்க!"ன்னாரு
செட்டெ கண்ணுராசு லாலு மாமாவப் பாத்துக் கண்டிக்குறாப்புல.
"வாழ வைக்கணுங்றதுதாம் எஞ்ஞ விருப்பம்.
அதுக்கு அவுங்க ஒத்துழைச்சாத்தானே?"ன்னுச்சு லாலு மாமா தேளு கொடுக்கால கொட்டுறாப்புல.
"ஆளாளுக்கு அவ்சரப்பட்டு வாய வுட
வாணாம். நீஞ்ஞ நெனைக்குற அளவுககு யிப்போ அதெப் பத்தியான வெசாரணையே இன்னும் வாரலயே.
அதுக்கு மின்னாடி ஏம் நீஞ்ஞ அவ்சரப்பட்டு வாய வுடுதீயே? பொண்ண அம்மாசி வூட்டுல வெச்சும்,
மாப்ளப் பையனெ பன்னீரு வூட்டுல வெச்சும் வெசாரிச்சிட்டு வாங்க. பஞ்சாயத்துத் தரப்புலேந்து
கண்ணுராசுவும், சின்னுவோட அப்பாவும் போவட்டும். பொண்ணு, மாப்புள வூட்டுத் தரப்புலேந்து
யார் யார்ர ரண்டு பேத்த அனுப்பப் போறீயேன்னு சொல்லிப்புட்டா. இன்னிக்கே யிப்பவே வெசாரணெ
பண்ணி முடிச்சிப்புடலாம்!"ன்னாரு பரமுவோட அப்பா லாலு மாமாவ அசமடக்குறாப்புல.
"மாப்ள வூட்டுத் தரப்புலேந்து நாமளும்,
எஞ்ஞ யண்ணன் மவ்வேம் சித்துவீரனும் வர்றோம்!"ன்னுச்சு லாலு மாமா ஒடனே.
"எஞ்ஞ தரப்புலேந்து யக்கா மவ்வேம்
சந்தானமும், எஞ்ஞ யண்ணன் மவ்வேம் பரசுவும் வருவாங்க!"ன்னாரு சுப்பு வாத்தியாரும்
பட்டுன்னு. மொதல்ல பொண்ணு தரப்புலேந்து வெசாரிக்கிறதுன்னு முடிவாயிடுச்சு. அதுக்குத் தகுந்தாப்புல சுப்பு வாத்தியாருகிட்டெ பொண்ண அம்மாசி
வூட்டுக்கு வாரச் சொல்லி ஆனது.
வெசாரிக்கிற அந்த ஆறு பேரும் மொதல்ல சுப்பு
வாத்தியாரு வூட்டுக்குப் பக்கத்துல இருக்குற அம்மாசி வூட்டுக்கு வந்தாங்க. அங்க செய்யுவக்
கொண்டு போயி விட்டுட்டு வந்ததுங்க. வெசாரிக்கிறதுக்கு மின்னாடி கண்ணுராசு சொன்னாரு,
"பெரியவங்க அளவுல பேச வேண்டியதெ பேசியாயிடுச்சு. வாழ வேண்டிய நீஞ்ஞ சொல்றது கருத்துலத்தாம்
சேத்து வைக்குறதெப் பத்தி நாஞ்ஞ முடிவு பண்ணியாவணும். அதால மனசுல ன்னா இருந்தாலும்
செரித்தாம், எதுக்கும் அஞ்ச வேண்டியதில்லா. தெகிரியமா சொல்லிப்புடணும். பஞ்சாயத்துங்றது
ரண்டு பேத்தோட நல்லதுக்கு எதெ செய்யணுமோ, அதெத்தாம் செய்யுவோம்!"ன்னு.
செய்யு மெதுவா கொஞ்சம் பதற்றமா பேச ஆரம்பிச்சா,
"நாஞ்ஞ கலியாணம் ஆன நாள்லேர்ந்து ஒரு நாளு கூட சந்தோஷமாவே யில்ல!"ன்னு.
ஒடனே லாலு மாமா, "சந்தோஷமா ல்லன்னா, ன்னா வெதத்துல சந்தோஷங்றதெ சொல்லணும்!"ன்னு
சொன்னதும், சின்னுவோட அப்பா லாலு மாமாவ தடுத்தாரு. "பொண்ணு பேசி முடிக்கிற
வரைக்கும். யாரு எதையும் பேயக் கூடாது. பேசி முடிச்சதெ அப்பிடியே எடுத்துட்டுப் போயி
பஞ்சாயத்துல வெச்சி அஞ்ஞத்தாம் முடிவு ஆவணும். எடையில யாரும் குறுக்கால போவக் கூடாது.
அதெ போலத்தாம் மாப்புள்ளைய வெசாரிக்கிறப்பவும். மொதல்ல அவுங்க மனசுல உள்ளதெ கொட்டி
முடிச்சிப்புடட்டும். பெறவு எதா இருந்தாலும் பாத்துக்கிடலாம்!"ன்னாரு சின்னுவோட
அப்பா.
"சந்தோஷம்ன்னா ன்னா சந்தோஷம்ன்னு
கேக்குறாக இல்லியா? ஒரு பொண்ணுக்கு எந்தச் சந்தோஷம் கெடைக்கணுமோ அந்தச் சந்தோஷந்தாம்.
அந்தச் சந்தோஷம் யில்லன்னா பெறவு எப்பிடிக் கொழந்தெ குட்டிப் பொறக்கும்? குடித்தனம்
ஆவும்? என்னவோ என்னா சந்தோஷம்ன்னு பெரிசா கேக்கறாரு. நாம்ம அதெ கூட பெரிசா நெனைக்கலீங்க.
கட்டியாச்சு. அந்தச் சந்தோஷம் இருந்தாலும் செரித்தாம். ல்லன்னாலும் செரித்தாம். சேந்து
வாழணும்ன்னுத்தாம் நெனைக்கிறேம். ஆன்னா ஏம் எம் புருஷன் சைக்கோ மாதிரிக்கி நடந்துக்குறாருங்றதுதாம்
புரியல!"ன்னு செய்யு சொன்னதும், சித்துவீரன், "இந்தாருடி! பொட்டெ சிறுக்கி!
சைக்கோ கிய்க்கோன்னா வெச்சுக்கோ பேத்து எடுத்துப்புடுவேம் பாத்துக்கோ! அரிப்பெடுத்து
அலையுறவளாடீ நீயி?"ன்னதும் சந்தானம் அத்தானுக்குக் கோவம் வந்துப்புடுச்சு.
"பஞ்சாயத்துக்குக் கட்டுப்பட்டுக்கிட்டு நிக்குதேம். பேத்து எடுத்துப்படுவேம்,
புட்டு எடுத்துப்புடுவேம்ன்னா ன்னா அர்த்தம்? எஞ்ஞ வூட்டுப் பொண்ண அப்பிடி பண்ண வுட்டுப்புட்டு,
அதுவும் எஞ்ஞ ஊர்லயே வந்து பண்ண வுட்டுப்புட்டு பாத்துட்டு நிப்பமா? நாஞ்ஞல்லாம் இருக்குறப்பவே
இந்தப் பேச்சு பேசியாவுதுன்னா அஞ்ஞ குடித்தனம் போயி நடந்தப்போ ன்னா பேச்சு நடந்திருக்கும்?
மொதல்ல இதெ முடிவு பண்ணுங்க. இந்த ஆளுங்க பேயாம கேக்குறதா இருந்தா மேக்கொண்டு பொண்ண
வெசாரிப்பேம். யில்லன்னா இந்த வெசாரணையே வாணாங்!"ன்னுச்சு சந்தானம் அத்தான் ரொம்ப
ஆக்ரோஷமா.
"அதாங்க செரி! ன்னவோ மாப்புள வூட்டுக்காரப்
பயலுவோ பொண்ணு வூட்டுக்கார நாஞ்ஞ இருக்குறப்பவே இந்தப் பேச்சுப் பேசுறானுவோ? இவனுங்க
எஞ்ஞ பொண்ணக் கொண்டு போயி ன்னா பேச்சுப் பேசியிருப்பானுவோ? சித்திரவதெ பண்ணிருப்பானுவோ?"ன்னுச்சு
பரசு அண்ணனும் கோவமா.
"இந்தாருங்கப்பா! மாப்ளே வூட்டுக்கார
ஆளுகளா! அவுங்க சொல்றது செரிதாங்! ஒழுங்க கேக்குறதா யிருந்தா கேப்பேம். யில்லன்னா
சொல்லுங்க. பஞ்சாயத்துச் சுத்தப்படாதுன்னு நீஞ்ஞ போற எடத்துக்குப் போயிக்கோங்க!"ன்னாரு
சின்னுவோட அப்பா கடுப்பா.
"இனுமே யாரும் பேய மாட்டோம். பொண்ண
நீஞ்ஞ சொல்லச் சொல்லுங்க. ஆன்னா பொண்ணு அதுவா சொல்றாப்புல யில்ல. சொல்லிக் கொடுத்து
தயாரு பண்ணி பேசுறாப்புல இருக்கு!"ன்னுச்சு லாலு மாமா.
"அதெல்லாம் பேயக் கூடாது. யப்போ
ஒஞ்ஞ வூட்டுப் பையேம் பேசுறப்போ நாஞ்ஞ அப்பிடிச் சொன்னா ஏத்துக்குவியளா? இதெல்லாம்
ன்னா பேச்சு?"ன்னுச்சு சந்தானம் அத்தான் கடுப்படிச்சாப்புல.
"யப்பாடிகளா! இதாங் கடெசீ! இனுமே
யாரும் வாயத் தொறக்கக் கூடாது. நாஞ்ஞ உட்பட. பொண்ணு பேசுறதெ கேக்குறேம். அதெ போயி
வெச்சு ஒரு முடிவெ பண்ணுறேம். அவ்வளவுதாங் வெசயம்!"ன்னாரு சொட்டெ கண்ணுராசு கண்டிப்பா.
*****
No comments:
Post a Comment