16 Oct 2020

உலகின் ஒரே மொழி


 உலகின் ஒரே மொழி

வாழ்க்கையைப் பற்றி எழுது என்கிறார்கள்

எழுத எழுத எழுத்துகள் கோணலாகப் போவதால்

என்ன எழுதுவது என்பது பிடிபடவில்லை

தட்டச்சு செய்வது கொஞ்சம் பரவாயில்லை

இப்போது எழுதத் துவங்கலாம்

புரிகிறதா பாருங்கள்

"யளனக தமட ணுறநச லர‍டிஎ

ணஉஎ இனயனந சநறணு டடிலைல ..."

என்று இப்படிப் போகிறது

புரிந்ததா புரிந்ததென்றால் நீங்கள் பாக்கியசாலி

புரியாவிட்டால் விட்டு விடுங்கள்

எல்லா மொழிகளையும் கற்றுக் கொண்டு இருக்க முடியாது

எதற்கும் எச்சரிக்கையாக இருங்கள்

ஒரு சர்வாதிகாரி உருவானால்

உலகின் கட்டாய மொழியாக அது ஆகும்

*****

No comments:

Post a Comment

குழு அமைக்கும் நேரம்!

குழு அமைக்கும் நேரம்! முடியும் என்றும் சொல்ல முடியாது முடியாது என்றும் சொல்ல முடியாது அப்போது அம்மா பிள்ளைகளிடம் சொல்வாள் “அப்பாவிடம...