4 Oct 2020

கறை போன பின்...

கறை போன பின்...

எழுதுவதற்கு எதுவும் கிடைக்காமல்

எழுந்து போவது கடினமாக இருக்கிறது

காதலிப்பவர்களுக்குக் காத்திருந்து ஏமாறும்

ஏக்கம் நிறைந்து இருக்கிறது

முதியோர் இல்லத்தில் தனித்து விடப்பட்ட

ஜீவனின் துடிப்பு அடங்கி நிற்கிறது

கைவிடப்பட்ட நோயாளியின் சுவாசம்

மேடேறி பள்ளத்தில் வீழ்கிறது

கோயில் வாசல் அமர்ந்து

கடவுளின் பிள்ளை என்றான பின்னும்

அனாதையாய்ப் போவதான எண்ணம் எஞ்சுகிறது

அடித்துத் துவைத்தற்காக

கறையை விட்டு விட்டத் துணி

கந்தலாகித் தொங்குகிறது

*****

வாய்ப்பில்லை

சங்கில் கடலின் பேரோசை

கிளிஞ்சலுக்குக் கடல் திரும்பும் ஏக்கம்

கடலை விட்டு வெகுதூரம் வந்து விட்டேன்

கடலுக்கு என்னைக் குறித்த நினைவுகள்

இருக்க வாய்ப்பில்லை

*****

No comments:

Post a Comment

பெருங்கூட்டப் பிரவாகத்தில் நீங்கள் ஒரு சிற்றுயிர்

பெருங்கூட்டப் பிரவாகத்தில் நீங்கள் ஒரு சிற்றுயிர் ஒவ்வொருவரும் எப்படி நடந்து கொள்ள வேண்டும் என்பதற்கான நெறிமுறைகள் வழங்கப்படுகின்றன பெ...