12 Sept 2020

நம் பெயர்

 

நம் பெயர்

அவரவர் செய்திருக்கும்

அலங்காரங்களை

பொதுமைபடுத்தி அணியும்

ஒரு பைத்தியகாரர்

நகரத்தில் இருக்கிறார்

அவரைப் பார்த்துச் சிரிக்கிறோம்

அவர் நம்மைப் பார்த்துச் சிரிக்கிறார்

அவ்வபோது அவரவர் வெளிப்படுத்தும்

அவைகளை

ஒட்டுமொத்தமாய் வெளிப்படுத்தும்

அவருக்கு அப்பெயர் எனில்

தப்பித்துக் கொண்டதால்

பெயர் மாற்றிக் கொள்ள விரும்பாத

பச்சோந்தி நம் பெயர்

*****

No comments:

Post a Comment