13 Sept 2020

எவருடையதும் எதுவுமில்லை

 
எவருடையதும் எதுவுமில்லை

எவருடையது எது

இங்கிருந்து பெறப்பட்ட எதுவோ

அதிலிருந்து அர்த்தம் உருவானது

எவருடையது எதுவுமில்லை

தம்முடையதாக ஆக்க வேண்டும்

என்று முயன்ற போது

ஆசை உருவானது

ஆத்திரம் உருவானது

பொறாமைகள், மோதல்கள் உருவாயின

எதுவும் எவருடையதுமில்லை என்பதை

ஏற்க மறுத்தவர்கள்

ஆசை தம்முடையதென்றார்கள்

ஆத்திரம் அவசியம் என்றார்கள்

பொறாமைகள் தவிர்க்க முடியாது என்றார்கள்

மோதல்கள் இயற்கை என்றார்கள்

எவருடையது எது

தம் ஆசை

தம் ஆத்திரம்

பொறாமை

மோதல்கள் அன்றி

எவருடையதும் எதுவுமில்லை

*****

No comments:

Post a Comment

மறைந்திருப்பதால் மறந்திருக்க முடியுமா?

மறைந்திருப்பதால் மறந்திருக்க முடியுமா? பழங்களையல்ல வேர்களைக் கவனியுங்கள் பழங்கள் கண்ணுக்குத் தெரிகின்றன வேர்கள் மறைந்திருக்கின்றன பழ...