19 Sept 2020

குற்றம் சாட்டல்

குற்றம் சாட்டல்

அது உம் பதில்

அதுதான் நீ

உம் கேள்வியால் செய்ய முயன்றதெல்லாம்

உம் பதிலைத் திணிக்க முயன்றதுதான்

அக்கொடூரமானப் பதிலைத் தாங்கும்

மனமில்லை என்பது அறிந்தும்

திணிக்க முயன்றாய்

செரிக்க முடியாத பதிலை

கோபமாய்க் கொப்புளித்தேன்

அப்படித்தான் நிகழும் என்பது அறிந்து

கோபத்திலிருந்து குற்றப் பத்திரிகை வாசித்தாய்

எல்லாவற்றுக்கும் காரணமான

பதிலைத் திணிக்க முயன்ற கேள்வியை

நீயே வைத்திருக்கலாம்

வன்முறையை விதைக்கப் பிறந்த நீ

என்னதான் செய்வாய்

எதை நிகழ்த்த வேண்டுமோ

அதை நிகழ்த்தி விட்டு

நியாயவாதியென நிற்கிறாய்

எம்மைக் குற்றம் சாட்டியபடி

*****

No comments:

Post a Comment

மூன்று லட்சியங்கள்! (சிறுகதை) - விகடபாரதி

மூன்று லட்சியங்கள்! (சிறுகதை) -          விகடபாரதி போக்குவரத்தில் நீந்தி வருவது சாகசம். சில நேரங்களில் எதிர்நீச்சல் போடுவது போல இருக்கிற...