22 Sept 2020

எங்குமற்ற நீதி

எங்குமற்ற நீதி

காரணமற்றுக் கசியும் கோபம்

எங்கிருந்தோ வரும் எரிச்சல்

மூன்றாம் காலத்தில் பாடும் ஓசை

இசையதிர்வுகளின் வேகம்

மன நெருக்கடிகளின் நெரிசல்

எதை மறுப்பது

அடிமைகளின் கைப்பாவை எத்திசை ஆடும்

சாந்தம் நொறுங்குகிறது

மென்மை பொடிப் பொடியாகிறது

விளைவுகள் பொருட்டல்ல

அதற்கும் மேல் என்றால்

சிக்கல் சிக்கிக் கொள்ளும்

பிரச்சனை அதுவா இதுவா எதுவோ

எதை முறையாகச் சொல்லிக் கொடுக்கும் வாழ்க்கை

புரியாதது தெரியாமலே அடிக்கடி

பாடங்கள் நடந்து கொண்டிருக்கின்றன

கடுப்பேற்றுகிறார்கள் கனவான்களே

எடையிட எங்கிருக்கிறது நீதித் தராசு

*****

No comments:

Post a Comment

அனுபவங்களின் பின் நிற்கும் முடிவுகள்

அனுபவங்களின் பின் நிற்கும் முடிவுகள் ஏதோ ஒன்றைத் தேட தேடுவது கிடைக்கவில்லை என்பதைத் தவிர வேறொன்றும் பிரச்சனையில்லை இவ்வளவுதான் இப்பட...