21 Sept 2020

வேட்டைச் சமூகத்தில் வாழ்கிறோம்!

வேட்டைச் சமூகத்தில் வாழ்கிறோம்!

துப்பாக்கிகள் இருந்து விட்டால்

மான்களைப் போலச் சுடுவார்கள் மனிதர்களை

மான் வேட்டை தடைசெய்யப்பட்டிருப்பதால்

மனித வேட்டைக்குத் தடையிருக்காது

 

குண்டுகளுக்கு இரக்கம் தெரியாது

இறக்கமும் தெரியாது

முட்டிக்கு மேல் பாய்ந்து

மார்பு வாய் என்று துளைக்கும்

 

இத்திருநாட்டில்

தேனாறு பாயாது

பாலாறு பாயாது

காவிரியும் பாயாது

தொட்டாக்கள் பாய்வதில் பஞ்சமிருக்காது

 

வாங்கப்பட்ட துப்பாக்கிகள் வரிப்பணத்தில்

வாங்கப்பட்ட குண்டுகள் வரிப்பணத்தில்

சுட்டவரின் வருமானம் வரிப்பணத்தில்

சுடப்படுபவர்கள் யார்

வரிப்பணம் கட்டுபவர்கள்

 

வாய்க்கரிசி போட

நெல் விளையாத நிலத்தில்

ஆலையும் வேண்டாம்

சாலையும் வேண்டாம்

அது கொலைக்களக் காதைக்காக

பல வழிச் சாலையாக ஆகவும் வேண்டாம்

 

எஜமானர்களைக் கொல்லும் சடங்குகள்

வேட்டை நாய்கள் சமூகத்திலும் இருக்காது

மனித வேட்டை ஓநாய்கள் சமூகத்தில் இல்லாமல் இருப்பதேது

*****

No comments:

Post a Comment

அனுபவங்களின் பின் நிற்கும் முடிவுகள்

அனுபவங்களின் பின் நிற்கும் முடிவுகள் ஏதோ ஒன்றைத் தேட தேடுவது கிடைக்கவில்லை என்பதைத் தவிர வேறொன்றும் பிரச்சனையில்லை இவ்வளவுதான் இப்பட...