18 Sept 2020

அங்கேயே இருந்து விட்டுப் போகட்டும்

அங்கேயே இருந்து விட்டுப் போகட்டும்

விஞ்சுவதற்கு எதுவுமில்லை

தோற்றல் நல்லது

அது மாபெரும் வெற்றியைப் போன்றது

வெல்வது மாபெரும் வீழ்ச்சியைப் போன்றது

யாவரும் விஞ்சவே ஆசைப்படுவார்கள்

விஞ்சி விட்டுப் போகட்டும்

விஞ்சலின் உச்சியில் சரிவு காத்திருக்கிறது

எவரையும் எவரும் விழ வைக்க முடியாது

மலை அங்கே இருக்கிறது

அது அப்படியே இருக்கட்டும்

காற்றால் மழையால் தேயட்டும்

தேயாமல் போகட்டும்

தேய்க்க முயற்சிக்க வேண்டாம்

அது அங்கேயே இருந்து விட்டுப் போகட்டும்

*****

No comments:

Post a Comment

மூன்று லட்சியங்கள்! (சிறுகதை) - விகடபாரதி

மூன்று லட்சியங்கள்! (சிறுகதை) -          விகடபாரதி போக்குவரத்தில் நீந்தி வருவது சாகசம். சில நேரங்களில் எதிர்நீச்சல் போடுவது போல இருக்கிற...