24 Sept 2020

இயந்திர மனிதர்கள் இயங்க ஆரம்பித்து விட்டார்கள்

இயந்திர மனிதர்கள் இயங்க ஆரம்பித்து விட்டார்கள்

முதல் அம்பு பாய்ந்த போது

முதல் வாள் வீச்சு விழுந்த போது

முதல் அரிவாள் வெட்டிய போது

முதல் துப்பாக்கி சுட்ட போது

வில்லும் அம்பும் இயந்திரம்

வாளும் அரிவாளும் இயந்திரம்

துப்பாக்கியும் ஓர் இயந்திரம்

அடுத்தடுத்த அம்புகள் பாய்ந்த போது

எய்தவர் இயந்திரமானார்

அடுத்தடுத்த வாள் வீச்சுகள் நிகழ்ந்த போது

வீசியவர் இயந்திரமானார்

அடுத்தடுத்த அரிவாள் வெட்டுகள் விழுந்த போது

வெட்டியவர் இயந்திரமானார்

அடுத்தடுத்த குண்டுகள் பாய்ந்த போது

சுடுபவர் இயந்திரமானார்

முதல் பொத்தான் அழுத்தி

அணுகுண்டு வெடித்த போது

பொத்தான் ஓர் இயந்திரம்

அடுத்தடுத்த அணுகுண்டுகள் வெடிக்கும் போது

பொத்தானை அமுக்குபவர் இயந்திரமாவார்

*****

No comments:

Post a Comment

பழக்கங்களும் தாவரங்களும் – வள்ளுவரின் பார்வை!

பழக்கங்களும் தாவரங்களும் – வள்ளுவரின் பார்வை! மனிதர்களும் விலங்குகளும் குறிப்பிட்ட காலம் வரை வளர்கின்றனர். தாவரங்கள் அப்படியல்ல. ஆயுள் ம...