7 Sept 2020

அங்கே எங்கு வலிக்கிறது

 

அங்கே எங்கு வலிக்கிறது

இன்னும் இயல்பாக

எழுத வேண்டும்

எனக்குத் தெரியும்

மன்னிக்கவும்

நீங்கள் என்னை

இயல்பாக எழுதவிட வில்லை

நீ அடிக்கும் போது

எனக்குத் தோன்றாத வலி

உணர்ச்சிவசப்பட்டு எழுதினால்

உமக்கு எங்கே வலிக்கிறது

*****

சட்டம் ஒரு கட்டம்

உயர் சட்டம் சமைத்த

பெரும் நீதிக் காவலர்

அவர் சொன்னார்

பசிக்காக மனிதரை

அடித்துத் தின்றிருந்தால்

மன்னித்திருப்போம்

மாட்டை அடித்துத் தின்றாய்

கொன்று விட்டோம்

அவர் உதித்த இம்முத்துக்காக

விருதுடன் கூடிய

பிரியாணி விருந்து தருவதென

தீர்மானித்தோம்

சட்டம் ஒரு கட்டம்

சிக்கிக் கொள்ளும்

சொல்லிச் சொல்லிச் சிரித்தோம்

அவரும் நாமும்

பசிக்குக் கொல்வது குற்றம்

விருந்துக்குக் கொல்வது சட்டம்

*****

No comments:

Post a Comment

அனுபவங்களின் பின் நிற்கும் முடிவுகள்

அனுபவங்களின் பின் நிற்கும் முடிவுகள் ஏதோ ஒன்றைத் தேட தேடுவது கிடைக்கவில்லை என்பதைத் தவிர வேறொன்றும் பிரச்சனையில்லை இவ்வளவுதான் இப்பட...