1 Sept 2020

பெயர் தெரியாத மனிதர்



பெயர் தெரியாத மனிதர்

பெயர் தெரியாத மரங்கள்

சாமரம் வீசுகின்றன

பெயர் தெரியாத பறவைகள்

கானம் இசைக்கின்றன

பெயர் தெரியாத காடு

பசி போக்குகின்றது

பெயர் தெரியாத  மலை

உச்சியில் ஏற்றுகிறது

பெயர் தெரியாத வானம்

நட்சத்திரங்களைத் தூவுகிறது

எந்த ஆண்டு எந்த மாதம் எந்த வாரம்

என்ற எண்ணிக்கையின் பெயர் தெரியாத

இந்த நாளில்

பெயர் தெரியாத இந்த மனிதரை

அகதியெனப் பெயர் சூட்டி

பெயரிடப்பட்ட ஒரு நாட்டுக்குள்

உள்நுழைய வற்புறுத்தாதீர்கள்

*****

வளர்ச்சி

இந்த விடுமுறையிலாவது

குழந்தைகளை

சும்மா இருக்க விடுங்கள்

அவர்கள்

கொஞ்சம் வளரட்டும்

வெற்றிடம் இருந்தால்தான்

திணிப்பதற்கு இடம் கிடைக்கும்

இல்லாத இடத்தில்

எம்மரங்கள் கிளை நீட்டும்

*****

No comments:

Post a Comment

ஏன் இந்த மனிதச் சமூகத்தைப் பிடிக்காமல் போகிறது?

ஏன் இந்த மனிதச் சமூகத்தைப் பிடிக்காமல் போகிறது? பல நேரங்களில் மனிதச் சமூகத்தைப் பிடிக்காமல் போய் விடுகிறது. அப்படியானால், மாட்டுச் சமூகம...