13 Aug 2020

சிந்தும் பேரன்பு

 

சிந்தும் பேரன்பு

கற்கண்டை முன் இழுக்கும்

எறும்புக்குத் தெரியும்

பின் தள்ளும் எறும்பின் பேரன்பு

பின் தள்ளும் எறும்புக்குத் தெரியும்

அதைச் சிந்தி விட்டுப் போன

சிறு குழந்தையின் பேரன்பு

சிந்தாமல் சாப்பிடுவதில் நிறைந்திருக்கும்

பேரொழுக்கத்திற்குக் குறைந்திடாது

சிந்திச் சாப்பிடும் குழந்தைகளின் பேரன்பு

*****

ஜென் இசட்

ஏ பார் ஆப்பிள்

சொல்லிக் கொடுத்தது

ஆப்பிள் டேப்லட்

*****

பத்தாவது பொருத்தம்

பழுதானச் சாலையில்

பழுதாகாத

வேகத் தடைகள்

*****


No comments:

Post a Comment

இருக்கும் போதும்… இல்லாத போதும்…

இருக்கும் போதும்… இல்லாத போதும்… சம்பாதிக்கும் காலத்தில் ஆயிரம் ரெண்டாயிரம் என்று கடன் கொடுக்க ஆயிரம் பேர் ஐயா கடன் வேண்டுமா என்று அ...