12 Aug 2020

கிறுக்குப் பாம்பு பழி வாங்கும் பாம்பு

 

கிறுக்குப் பாம்பு பழி வாங்கும் பாம்பு

இது உன் கடைசி கையெழுத்து என்றால்

முதல் கையெழுத்தின் ஞாபகம் உனக்கிருக்கும்

இடையில் போட்ட கையெழுத்துகளை

எத்தனை என்று எண்ணியிருப்பாயா

இடிந்து விழுந்த கட்டடத்துக்காக

உடைந்த விழுந்த பாலத்துக்காக

செயற்கை மரணத்தை

இயற்கை மரணமென்று காட்ட

கட்டாத கழிவறைகளுக்காகப் போட்ட

கையெழுத்துகளின் துர்வாடை கேட்கிறதா

கடைசி கையெழுத்து

பாவ விருட்சமாய் முளைவிடுவது தெரிகிறதா

கிறுக்கலான கையெழுத்து வழி ஓடும்

பழிவாங்கும் நச்சுப் பாம்பு

துரத்தத் தொடங்கி விட்டது

கையெழுத்திட்டப் பேனாக்கள் ஓடி விட்டன

நீ மாட்டிக் கொண்டாய்

*****

No comments:

Post a Comment

மறைந்திருப்பதால் மறந்திருக்க முடியுமா?

மறைந்திருப்பதால் மறந்திருக்க முடியுமா? பழங்களையல்ல வேர்களைக் கவனியுங்கள் பழங்கள் கண்ணுக்குத் தெரிகின்றன வேர்கள் மறைந்திருக்கின்றன பழ...