17 Aug 2020

செத்து விட்ட நாவல்

 

செத்து விட்ட நாவல்

எனது நாவலில்

கிளைமேக்ஸ் செத்து விட்டது

நடுவில் சில பக்கங்கள்

அச்சுக்கு வரவில்லை

பாத்திரங்கள் காணாமல் போனப் புகார்

விசாரிக்கப்படாமல் இருக்கிறது

ஆட்கொணர்வு மனுவோடு சென்ற

வாசகர்கள் தனிமைச் சிறையில்

இருப்பதாகக் கேள்வி

முன் அட்டையில் ஒரு நாராசப் படம்

பின் அட்டையில்

உங்கள் நூல் விமர்சனத்துக்கானக் காலியிடம்

சில ஆயிரம் மரங்களைச் சாகடித்து

இந்நாவல் அச்சடிக்கப்படத்தான் வேண்டுமா

சில கண்கள் பார்ப்பதற்காக

பல லிட்டர் அச்சுமை ஊற்றப்படத்தான் வேண்டுமா

ஒரு புள்ளியில் தொடங்கி ஒரு புள்ளியில் முடியும்

வாழ்க்கைச் சுற்றுக்கு நாவல் என்று பெயர்

அவரவர் வாழ்க்கைக்கு அவரவர் படித்துக் கொள்ள

அவரவர்க்கு ஏற்ப ஒரு நாவல் உண்டு

எழுதுவதும் தயங்குவதும் இருவேறு நாவல்

*****

No comments:

Post a Comment

அனுபவங்களின் பின் நிற்கும் முடிவுகள்

அனுபவங்களின் பின் நிற்கும் முடிவுகள் ஏதோ ஒன்றைத் தேட தேடுவது கிடைக்கவில்லை என்பதைத் தவிர வேறொன்றும் பிரச்சனையில்லை இவ்வளவுதான் இப்பட...