14 Aug 2020

ஆலய தரிசனம்

 

ஆலய தரிசனம்

செருப்பிட்டு வரக் கூடாத

ஆலயம் ஒன்றில்

தெய்வம் ஒன்று

தலையொன்றில்

கால் வைத்து மிதிக்கலாம்

*****

ஜாயின்ட் வண்டி

முன்பக்க மிதிவண்டி

பின்பக்க இரு சக்கர வாகனம்

ஒன்று சேர்த்தால்

பீப் பீப் ஹாரன் சத்தம்

குழந்தைக்கான மூணு சக்கர வண்டி

*****

ஆழ் மனக் குளிப்பு

கடலின் ஆழத்தில்

சவங்கள் இருக்கும்

காணாமல் போன

கப்பல்கள் இருக்கும்

முத்துக் குளிப்பவருக்கு

முத்து கிடைக்கும்

*****

பி.பி. = பி2

ரெளத்திரம் பழகாதே

பி.பி. எகிறும்

பி.பி. மாத்திரை போலி

என்று தெரிந்தும்

ரெளத்திரம் பழகினால்

இன்னும் எகிறும் பி.பி.

*****

சா

சாவதற்குப் பயப்படாதே

பயப்படுவதால்தான்

சாகிறாய்

*****

No comments:

Post a Comment

மூன்று லட்சியங்கள்! (சிறுகதை) - விகடபாரதி

மூன்று லட்சியங்கள்! (சிறுகதை) -          விகடபாரதி போக்குவரத்தில் நீந்தி வருவது சாகசம். சில நேரங்களில் எதிர்நீச்சல் போடுவது போல இருக்கிற...