25 Aug 2020

காசு கொஞ்சம் காசு ஒன்று

காசு கொஞ்சம் காசு ஒன்று

நிறைய காசு இருந்தால் நல்லது

உண்டியலுக்குக் கொஞ்சம்

பிச்சையிட கொஞ்சம்

மாமூலுக்குக் கொஞ்சம்

வரிகளுக்குக் கொஞ்சம்

பூவா? தலையா? பார்க்க ஒன்று

மூடிகள் நெம்ப ஒன்று

சிறுவட்டம் போட ஒன்று

நெற்றியில் வைக்க ஒன்று

*****

ஐந்து ஆறு நான்கு

மலரின் விரல்கள் ஐந்து

நான்கென்று இருந்தால்

ஒன்றைக் கூட்டிக் கொள்

ஆறென்று இருந்தால்

ஒன்றைக் குறைத்துக் கொள்

பார்ப்பது சரியாக இருக்கலாம்

ரசிப்பது தவறாகி விடக் கூடாது

*****

விதையின் பிரசவம்

மகிழ்வைப் பெற்றுக் கொள்

உன்னால் உலகம்

மகிழ்ச்சியற்றுப் போக வேண்டாம்

எப்படி இருக்கிறாயோ

அப்படியே உலகைச் செய்கிறாய்

மகிழ்ச்சியோடிருப்பதன் மூலம்

மகிழ்ச்சியோடிருக்கச் செய்

பழத்தை உண்ட பறவை

விதையைப் பிரசவிக்கிறது

*****

No comments:

Post a Comment

பழக்கங்களும் தாவரங்களும் – வள்ளுவரின் பார்வை!

பழக்கங்களும் தாவரங்களும் – வள்ளுவரின் பார்வை! மனிதர்களும் விலங்குகளும் குறிப்பிட்ட காலம் வரை வளர்கின்றனர். தாவரங்கள் அப்படியல்ல. ஆயுள் ம...